தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரேயர் 6:18 

நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சகோதரர்களுக்கு ஆறுதல் உண்டாக பேசுகிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் காயப்பட்ட ஆத்துமாவை பரிசுத்த ஆவியானவரால் தேறுதலடைய செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 21:18-34 

அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.

தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.

அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.

அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?

உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?

ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.

அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.

வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான்.

இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.

இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.

பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்.

வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா? அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?

துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.

அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத்தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?

அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.

பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.

நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.

வார்த்தைகளில் யோபு துன்மார்க்கருக்கு கர்த்தர் கொடுக்கும் தண்டனையை பற்றி நாகமாத்தியனான சோப்பாரிடத்தில் கூறிவிட்டு, சிநேகிதர்களுடைய இருதயம் அநியாயத்தால் நிறைந்து ஆலோசனை கொடுக்கிறார்கள் என்று சொல்லி, சோப்பாரிடத்தில் கேள்வி எழுப்புகிறான்.  அல்லாமலும் அவன் சொல்வது துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டு வரப்படுகிறான்.  அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாக தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்கு தக்க பலனை அவனுக்கு சரிக்கட்டுகிறவன் யார்? அவன் கல்லறைக்குக் கொண்டு வரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.  பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனது போல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்கு செல்லுவார்கள்.  நீங்கள் வீணான ஆறுதலை எனக்கு சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மை கேடு இருக்கிறது என்றான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட பகுதிகளில் யோபு அவன் சிநேகிதனாகிய சோப்பாரிடத்தில் கூறிய வார்த்தைகள் கர்த்தர் துன்மார்க்கனுக்கு கொடுக்கும் வாழ்வை விளக்கிக் காட்டுகிறான்.  என்னவென்றால் நாகமாத்தியனான சோப்பார் சொல்லுகிற வார்த்தைகள் பிரயோஜனமில்லாமல் வீணான வார்த்தைகளாக இருக்கிறது என்று கூறுகிறதை பார்க்கிறோம்.  ஆதலால் நாம் யாருக்காவது ஆறுதல் வார்த்தைகள் கூறுவோமானால் அவர்கள் ஆத்துமாவின் புண் ஆறுதல் அடையத்தக்கதாக பேசி ஆற்றி தேற்றுகிறகிறதாகயிருக்க வேண்டும்.  இப்படியாக நாம் நம்முடைய சகோதரர்களுக்கு ஆறுதல் உண்டாக பேசுகிறவர்களாகவும், அதற்கேற்ற கிருபையும், சத்தியமும் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.