தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 2:11

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்களும், சிந்தைகளும் உடையவர்களாக இருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை குற்றப்படுத்தாதபடி பாதுகாத்துக்கொள்வோம் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 20:1-7

அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:

இதற்காக மறுஉத்தரவு கொடுக்க சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.

நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.

துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,

அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,

அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் நாகமாத்தியனான சோப்பார் யோபு சொன்னதற்கு  பிரதியுத்தரமாக நீர் சொன்ன காரியங்களுக்கு மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்து சொல்லுகிறேன் என்று சொல்லி நிந்தித்தேன் என்று சொல்லி நான் கடிந்துக் கொள்ளபட்டதை கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.  துன்மார்க்கரின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும் என்பதையும் மனுஷனை பூமியில் வைத்த ஆதி காலமுதல் இப்படியிருக்கிறது என்பதை அறியீரோ? அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள் மட்டும் எட்டினாலும், அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்து போவான்; அவனை கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.  மேலும் அவன் எப்படி போவான் என்று கூறுகிறான் என்றால் 

யோபு 20:8-29 

அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.

அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.

அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.

அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.

பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,

அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.

அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.

அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.

தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.

தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக்கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.

அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும்,

தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.

அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை.

அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.

தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.

இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.

உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.

அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.

வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.

அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.

இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான்.

மேற்கூறபட்ட வார்த்தைகளில் வரும் பிரதிகூலங்கள் எல்லாம் தேவனால் துன்மார்க்கனுக்கு கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம்.

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கையில் நம் இருதயத்தில் விரியன் பாம்பின் விஷம் இல்லாமலும், நம் உள்ளம் தேனும், நெய்யுமாகிய தேவ வசனமும், தேவனுடைய  அபிஷேகமாகிய நெய்யும் ஓடுகிற வாய்க்கால்களும், ஆறுகளும் உடையதாக இருக்க வேண்டும்.  ஆனால் விரியன் பாம்பின் விஷம் இருந்தால் துன்மார்க்க கிரியைகள் நம்மை விட்டு ஒழிந்து போகாது.  ஆதலால் அல்லாமலும் ஏழை எளிய ஆத்துமாக்களை ஒடுக்கக் கூடாது.  எப்படியென்றால் எந்த  நாளிலாகிலும் நம்முடைய உள்ளத்திலிருக்கிற செய்கைகளுக்கேற்ற பலன் கர்த்தரிடத்திருந்து நமக்கு கிடைக்கும் என்பது நிச்சயம்.   ஆதலால் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கேற்ற நல்ல உள்ளம், நல்ல சிந்தை, நல்ல எண்ணங்கள் உள்ளவர்களாக நடக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

 ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.