தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 45:7
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அக்கிரமத்தின் செயல்களை முற்றிலும் நம்மை விட்டு அகற்ற வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நமக்கும், நம் எல்லாருக்கும் தேவன் நம்முடைய சிருஷ்டிகர் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 15:18-24
ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
மேற்கூறிய வசனங்களில் தோமானியான எலிப்பாஸ் யோபுக்கு பிரதியுத்தரமாக கூறுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால்; அவன் துன்மார்க்கன் என்றும், பலவந்தன் என்றும், பாழாக்குகிறவன் அவன் மேல் வருவான் என்றும், கர்த்தரிடத்தில் நம்பிக்கையில்லாமல் இருளில் இருக்கிறவன் என்றும், அந்தகாரத்தின் நாள் சமீபத்தில் இருக்கிறது என்று அறியாமல் அலைந்து திரிகிறவன் என்றும், அந்தகாரத்தின் நாள் தனக்கு சமீபித்திருக்கிறது என்று அறிவான்,. அவன் மேல் இக்கட்டும் நெருக்கமும் அவனை கலங்கபண்ணி, யுத்தசன்னதனான ராஜாவை போல் அவனை மேற்கொள்ளும். யோபுவை குறித்து அவன் சிநேகிதனாகிய எலிப்பாஸ் சொல்வது
யோபு 15:25-35
அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினிஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்.
வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப்போலவும் அவன் இருப்பான்.
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
மேற்கூறபட்ட வசனங்களை தியானிக்கும் போது யோபு தன் நிலமையை சீர்திருத்தாமல் இருந்தால் முன்கூறிய காரியங்கள் எல்லாம் அவன் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு மாறாக மாயையை பிறப்பித்து அழிவான் என்னெழுதபட்டிருகிறது. ஆதலால்
பிரியமானவர்களே, நாம் நம்மை நாமே சோதித்து அநியாயத்தை கர்ப்பந்தரித்து அக்கிரமத்தை பெற்றெடுத்து மாயையை பிறப்பிக்காதபடி ஜாக்கிரதையோடு நீதியை கர்ப்பந்தரித்து அக்கிரமத்தை நம்மை விட்டு அகற்றி, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.