தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:78
அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்கு நம் உள்ளத்தில் அகங்கார எண்ணங்கள் வராதபடி ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை நாம் நீதியும் நியாயப்பாதைகளுக்குள்ளும் நடத்தி செல்ல வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 13:13-19
நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
மேற்கூறிய வசனங்களில் மேற்கூறபட்ட யோபு தன் சிநேகிதர்கள் பேசினதற்கு மாறாக பேசுகிறது என்னவென்றால; நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் என்று சொல்லி, எனக்கு வருகிறது வரட்டும், நான் என் பற்களினால் சதையை பிடுங்கி, என் பிராணனை கையில் வைப்பானேன்? அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன். அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான். நான் சொல்கிற வசனத்தை கவனமாய் கேளுங்கள்.. ஆனால் யோபு சொல்வது என்னோடே வழக்காட வேண்டுமென்று இருக்கிறவர்கள் யார்? ஆனால் மொளனமாய் இருந்தால் ஜீவிக்கலாம் என்று சொல்லி அவன் கர்த்தரிடத்தில் கேட்கும் காரியங்கள் என்னவென்றால்
யோபு 13:20, 21
இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
மேற்கூறபட்ட காரியங்களை கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டு, பின் அவன் கர்த்தரிடத்தில்
யோபு 13:22-28
நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற, வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.
மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, அவன் எவ்வளவு அகங்காரங்களோடு பேசுகிறான் என்று நமக்கு தெரிய வேண்டும். இந்த அகங்காரங்களும், மறுபடி சொல்லி பரிகாசம் பண்ணுகிறதையும் கர்த்தர் தம்முடைய யோபு புஸ்தகத்திலே கடைசி அத்தியாயங்கள் நெரிங்கி வரும் போது பெருங்காற்றிலிருந்து பேசுகிறார். இதனைக் குறித்து கடைசி பகுதிகள் ஆகும் போது நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வாஞ்சையோடு விழித்திருப்போம்.
பிரியமானவர்களே,இதனை போலவே நம்மிலும் அநேகம் பேர் தேவனிடத்தில் தான் இரட்சிப்பு உண்டு என்று அறிந்தும், நாம் நீதி நியாயங்கள் விளங்க நடந்துக்கொள்கிறோம் என்று நம்மை குறித்து நினைத்து தங்கள் அகங்காரங்களும், கீழ்படியாமையும், பரியாசமான வார்த்தைகளால் கர்த்தருக்கு விரோதமாக வைராக்கியமாக அகங்காரங்களோடு பேசுகிறோம். இப்படியாக அகங்காரங்களுக்கு நம்முடைய உள்ளத்திற்கு இடம் கொடாதபடி கர்த்தருக்கு காத்திருந்து அவர் இரக்கத்தை பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.