தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 26:16 

கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக எவ்விதத்திலும் மறைவாகவோ, வெளிப்படையாகவோ நினைக்கவோ, பேசவோக் கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் தரும் வார்த்தைகளை விவரித்து சொல்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

யோபு 12:10-13 

சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.

வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?

முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

மேற்கூறிய வசனங்களில் சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.  வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறது போல, செவியானது வார்த்தைகளைச் சோதித்து பார்க்கிறதல்லவா? முதியோரிடத்தில் ஞானமும், வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே., என்று சொல்லி விட்டு கர்த்தரிடத்தில் ஞானமும்,வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்கு  புத்தியும் உண்டு என்று சொல்லி விட்டு சொல்வது 

யோபு 12:14-25 

இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.

இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.

அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.

அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.

அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.

அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.

அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.

அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.

அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.

அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.

மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் யோபு முதிர் வயதாயிருக்கிறேன் என்றும், அவனிடத்தில் தான் ஞானமும், வல்லமையும் புத்தியும் உண்டு என்பதையும் எடுத்து கூறினதுமல்லாமல் தன்னை கர்த்தர்  அலையப்பண்ணினது காரணமில்லாமல் செய்தார் என்று தன் வாயால் பேசி எல்லா பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது என்று சொல்லி, அவர்;  தான் செய்தால் யாராலும் அதனை மாற்றமுடியாது என்றும் கூறிவிட்டு சொல்வது என்னவென்றால் அவர் பூமியினுடைய ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப் போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரங்கத்திலே அலையப்பண்ணுகிறார் என்று  யோபு தனக்கு நேரிட்ட அலைச்சலைக் குறித்து மறைமுகமாக பேசுகிறான்.  அப்படியாக அவர்களை அலையப்பண்ணி, அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள், வெறித்தவர்களை போல அவர்களை தடுமாறி திரியப்பண்ணுகிறார் என்று சொல்கிறான்.  

பிரியமானவர்களே, இதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது எதற்கென்றால் நம்மிடத்தில் இவ்வித பொல்லாத இருதயமாகிய சன்மார்க்க இருதயம் இருக்கக்கூடாது என்பதற்காக கர்த்தர் யோபுவை உத்தமன் என்று சொல்லியும் அவனில் மறைந்திருக்கிற சன்மார்க்க  கிரியைகளை எடுத்து காட்டி விளக்குகிறார்.  இதனை  போல் அநேகர் இப்படி தான் கர்த்தர் காரணமில்லாமல்  தண்டிக்கிறார் என்று பேசுகிறோம்.  ஆதலால் கர்த்தர் நம்மை தண்டிக்கும் போது, நாம் தாழ்மை தரித்த மக்களாக காரணமில்லாமல் கர்த்தர் நம்மை தண்டிக்கமாட்டார்: அவர் ஞானத்தில் ரகசியமானவர்   என்பதனை உணர்ந்து நம்மை தாழ்த்தி தேவ பாதத்தில் மன்றாடி விடுதலைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.