தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 1நாளாகமம் 16:23,24

பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.

ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் தரும் வார்த்தைகளை விவரித்து சொல்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய  ஞானத்தின் ரகசியங்களை பெற்றுக்கொள்ள உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 12:1- 9

யோபு பிரதியுத்தரமாக:

ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.

உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.

ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.

கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.

இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்.

அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.

கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?

மேற்கூறிய வசனங்களில் சொல்லப்படுவது என்னவென்றால் நாகமாத்தியனாகிய சோப்பார் சொன்ன வார்த்தைகளுக்கு யோபு பிரதியுத்தரமாக நீங்களே ஞானமுள்ள ஜனங்கள், உங்களுடனே ஞானம் சாகும் என்று சொல்லி உங்களைப் போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிபட்டவைகளை அறியாதவன் யார்? சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு தேவனை நோக்கி பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.  ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான். காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.  கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவன் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டு வந்து கொடுக்கிறார்.  இப்போதும் நீ மிருகங்களை கேட்டு பார்,  அவைகள் உனக்கு போதிக்கும்; ஆகாயத்து பறவைகளை கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.  அல்லது பூமியை விசாரித்து கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள் அவைகள் உனக்கு விவரிக்கும். 

பிரியமானவர்களே,மேற்கூறப்பட்ட பகுதிகளை தியானிக்கும் போது யோபு, தன் சிநேகிதர்கள் மூலம் கர்த்தர் சொன்ன ஒரு வார்த்தையும் அனுசரியாமல், தன்னில் ஞானம் விளங்குவதாகவும், அவனிடத்தில் புத்தி உண்டு என்றும். அவன் மற்றவர்களை காட்டிலும் ஒரு போதும் தாழ்ந்தவனல்ல என்றும், அவன் உத்தமன் என்று சொன்னதினாலே நீதிமானாக விளங்குகிறானென்றும், தன் சிநேகிதரால் நிந்திக்கபட்டு இருக்கிறதால் தேவனிடத்தில் பிரார்த்திக்கும் போது கர்த்தர் அவனுக்கு மறு உத்தரவு அருளுவார் என்றும், சிநேகிதரால் பரியாசம் பண்ணபடுகிறான் என்றும், ஆபத்துக்குள்ளாயிருப்பவர்களை சுகமாயிருப்பவர்கள் பார்த்தால் இகழ்வார்கள் என்றும், காலிடனவர்களுக்கு இது நேரிடும் என்கிறான். அவனிடத்தில் பேசினவர்களை கள்ளர்கள் என்கிறான். அவர்கள் கூடாரங்களில் செல்வம் உண்டு என்கிறான்.  தேவனை கோபப்படுத்துகிறவர்களுக்கு சாங்கோபமுண்டு, அவர்கள் கையிலே தேவன் கொண்டு வந்து சேர்க்கிறார்.  மேலும் அவனை பற்றி அவன் சொல்கிறான் மிருகங்கள் அவனை குறித்து போதிக்கும் என்றும், ஆகாயத்து பறவைகளிடத்தில் கேட்டால் அவைகள் அறிவிக்கும் என்றும், பூமியை விசாரித்துக்கேள் அது உனக்கு உபதேசிக்கும், சமுத்திரத்தின் மச்சங்கள் உனக்கு விவரிக்கும் என்கிறான் .  இவை எல்லாவற்றையும் நாம் பார்க்கும் போது மனுபுத்திரனில் உள்ள ஆத்துமாவின் கிரியைகளை கர்த்தர் குறிக்கிறார்.  கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கடைசியாக சமுத்திரத்தின் மச்சங்கள்;  இவைகளை உனக்கு விவரிக்கும் என்கிறாரென்றால் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் போதிக்கிறவர்கள் மட்டுமல்ல, தேவ ஆலோசனையை அறிவிக்கிறது மட்டுமல்ல, மற்றும் உபதேசத்தோடு விட்டுவிடாமல் அவர் வார்த்தைகளை விவரித்து சொல்கிறவர்களாக இருக்க வேண்டும். இவையெல்லாம் கர்த்தருடைய கரம் இவையெல்லாம் செய்யும்  என்பதனை அறிந்து கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக நம்மை  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.