தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 1:21
அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் அவருடைய ஞானத்தின் ரகசியங்களை அறிந்துக் கொள்ள உணர்வுள்ளவர்களாக மாறவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய வாழ்வில் பேரின்ப சந்தோஷம் அடைய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 11:1-6
அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,
உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகள் யோபு பேசினதை கேட்ட நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக; ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்ல வேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ? என்றும் யோபுடத்தில் வீம்பு வார்த்தைகள் உண்டு என்றும், பரியாசம் பண்ணுதல் உண்டென்றும், அவன் சொல் சுத்தமானதென்றும், தேவரீருடைய பார்வைக்கு துப்புரவானவன் என்றும் சொல்லுகிறீர். ஆனாலும் அவன் யோபோடே சொல்லுவது தேவன் தமது உதடுகளை திறந்து உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; அது இரட்டிப்புள்ளதாயிருக்கும், ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மை தண்டிக்கவில்லை என்று அறிந்துக்கொள்ளும் என்கிறான். மேலும் அவன் சொல்வது தேவனுடைய அந்தரங்க ஞானம்
யோபு 11:7-15
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?
அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.
அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?
மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?
புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகளால் யோபிடம் இவ்வித சுபாவம் இருக்கிறது புரிய வருகிறது. ஆதலால் நாகமாத்தியனாகிய சோப்பார் சொல்கிறான் மாயமான வாழ்வைகுறித்தும், அக்கிரமம் அவனிடத்தில் உண்டு என்றும், யோபு பெருநெஞ்சுள்ளவன் என்றும் கூறிவிட்டு யோபிடம் சொல்வது, நீர் உமது இருதயத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தி, உமது கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். பின்பு அவன் சொன்னது உம்முடைய கையில் அக்கிரமம் இருந்தால் அதனை தூரத்தில் அகற்றி விட்டு, அநியாயம் உம்முடைய கூடாரத்தில் வாசமாகயிருக்க வொட்டாமல் இருந்தால், கர்த்தருக்கு நேராக முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர். அப்போது வருத்தம் மறக்கப்பட்டு, கடந்து போன தண்ணீரை போல வருத்ததை நினைப்பீர். அப்போது உமது ஆயுசு பட்டபகலை பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்திருந்த நீர் விடியற்காலத்தைப் போலிருப்பீர். நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர், தோண்டி ஆராய்ந்து சுகமாய் படுத்துக்கொள்வீர். பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர் என்றும்; அநேகர் உம்முடைய முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள். ஆனால் துன்மார்க்கருடைய கண்கள் பூத்துபோய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம் போல் அழிந்து போகும் என்றான். பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களில் யோபிடத்தில் அநேக துஷ்ட கிரியைகள் இருக்கிறதன் காரணம்; அவன் கர்த்தருடைய ஞானத்தின் இரகசியத்தை அறிந்துணராமல் இருக்கிறதால் அவன் நடக்கிற பாதையை அவனால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை என்பது புரிய வருகிறது. அநேகர் யோபுவை குறிந்து அநேகமாக வசனத்தில் ஆழமாக அறிந்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஏதோ துவக்கத்தில் கர்த்தர் யோபு உத்தமன் என்றும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனும் அவனை போல் பூமியில் யாரும் இல்லை என்று சொன்ன காரணத்தால் அதனை மட்டும் பார்த்து அவனை நீதிமான் என்று நினைத்து, தங்களையும் அவனோடு சேர்த்து மெச்சிக்கொள்வார்கள். கர்த்தர் யோபுவை குறித்து சொன்ன காரியம் உண்மைதான், கர்த்தர் சொன்னதை யாரும் மறுக்க முடியாது ஆனால் கர்த்தர் அவனை சன்மார்க்கன் என்று சொன்னதையும், அவர் அவனுடைய சிநேகிதன்மார்களோடு அவன் எப்படிபட்டவன் என்று பேசினதையும் சிந்திக்கமாட்டார்கள். அல்லாமலும் சன்மார்க்கம் உள்ள இடத்தில் துன்மார்க்க கிரியைகள் உண்டு என்பதனை அறிந்துக்கொள்ள வேண்டும் . சன்மார்க்கனையும், துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். இதனை கருத்தில் கொண்டு கர்த்தருடைய தீர்ப்பு அவருடைய ஞனத்தின் இரகசியத்தால் தான் நம்மேல் கணக்குப்போடுவார் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். ஆதலால் பிரியமானவர்களே, நம்மிடத்தில் அக்கிரமம் உண்டானால் அதனை நம்மைவிட்டு முற்றிலும் அகற்றிக்கொண்டு, அநியாயம் நம்முடைய கூடாரமாகிய சரீரத்தில் வாசமாயிருக்க வொட்டாதபடி இருப்போமானால், நம்முடைய முகத்தை மாசில்லாமல் கர்த்தருக்கு நேராக ஏறெடுத்துக்கொண்டு பயப்படாமல் திடனாக இருக்க முடியும். அப்பொது நம் வருத்தங்கள் எல்லாம் மறந்து விடுவோம். அப்போது நம்முடைய ஆயுசு பட்டபகலை பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும் என்று கர்த்தர் யோபுவை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். துன்மார்க்க உள்ளம் இருக்குமானால், அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம் போல் அழிந்து போகும் என்பதால், நம்முடைய நம்பிக்கை திடனாயிருக்கும்படி எல்லா அக்கிரமத்தையும் நம்மை விட்டு அகற்றி, அநியாயங்களை நம்முடைய கூடாரத்தில் வாசமாயிருக்க இடம் கொடாதபடி நம்முடைய உள்ளம் தூய்மையும், சுத்தமுமான உள்ளமாயிருக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.