தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 68:3

நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய வாழ்வில் ஆனந்த சந்தோஷம் அடைய வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், கர்த்தரிடத்தில் உண்மையும் நீதியும் நேர்மையுமாய் நடந்துக்கொண்டு திடனோடு கர்த்தருக்குள் வாழ வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 10:1-2 

என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

மேற்கூறபட்ட வார்த்தைகளில் யோபு பில்தாத்தோடு மீண்டும் பேசுவது என்னவென்றால் என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது என்று கூறிவிட்டு; அவன் தன் துயரத்துக்கு அவனுக்குள்ளே இடம் கொடுத்து மன சஞ்சலத்தினாலே பேசுகிறான் என்பது தெரிகிறது. அந்த வார்த்தையாவது யோபு 10:3-9

நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?

மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?

நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,

உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?

நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.

உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.

களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

மேற்கூறிய வார்த்தைகள் எல்லாம் யோபு தன்னை உணராமல் கர்த்தரிடத்தில் கேட்க போகிற வார்த்தைகளைக் குறித்து சூகியனான பில்தாத்திடம் கூறுகிறான்.  அந்த வாக்கியத்திலெல்லாம் அவனுடத்தில் துன்மார்க்கம் இல்லை என்றும், துன்மார்க்கரை கர்த்தர் கிருபையாய் பார்க்கிறாரென்றும், கர்த்தர் அவனையும், அவனுக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கி படைத்திருந்தும் அதனை நிர்மூலமாக்குகிறாரென்றும், அவனுடைய அக்கிரமத்தை கர்த்தர் கிண்டி கிளப்பி பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறார் என்றும் மேலும் அவன் சொல்கிறான் 

யோபு 10:10-13 

நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?

தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.

இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.

மேற்கூறபட்ட வார்த்தைகளால் கர்த்தரை புகழுவதும் பின்பு தன் வேதனையின் காரணத்தால் யோபு 10:14-17 

நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.

நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.

சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.

நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் யோபுவை உதாரணமாக வைத்து மனுஷர்கள் மத்தியில் அவருடைய வல்லமையை விளங்கபண்ணுகிறார் என்பதனை குறித்து அவன் சொல்வது நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ண அவன் மேல் கோபத்தை அதிகரிக்கபண்ணுகிறார் என்றும் அவர் தண்டனைக்கு கீழ்படியாதவர்களுக்கு அவர் போராட்டத்தின் மேல் போராட்டம் அதிகரிக்கப் பண்ணுகிறார் என்றும், அவ்விதம் உள்ளவர்கள் தங்கள் உள்ளத்தில் எழுப்பும் கேள்விகளை யோபு எழுப்பி நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதென்னவென்றால் 

யோபு 10:18-22  

நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.

நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.

என் நாட்கள் கொஞ்சமல்லவோ?

காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள் சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள இருண்ட தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,

நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

மேற்கூறபட்ட வார்த்தைகள் என்னவென்றால் நான் காரிருளும், மரணாந்தகாரமான இருண்ட தேசமும், இருள் சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பி வராத தேசத்துக்கு நான் போகுமுன்னே சற்று இளைப்பாறும்படி என்னை விட்டு ஓய்ந்திரும் என்கிறான்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் கர்த்தரிடத்தில் நாம் கேள்வி கேட்போமானால் போராட்டத்தின் போராட்டம் வரும் என்பதும், அதனை சகிக்க முடியாமல் மீண்டும் நம்மை கிறிஸ்துவின் ஆவியினால் புதுப்பித்து இரட்சிக்கபடாமல் நாம் மாண்டு போக நினைத்தால் நாம் அதுவரை செய்த நீதிக்குரிய பலன் கிடையாமல் அழிந்து மரணாந்தகாரமான இருண்ட தேசத்திற்கு போவோம் என்பதும் நமக்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால் நாம் நீதிமானாகிய கிறிஸ்துவின் நற்கிரியைகளால் நம்முடைய உள்ளம் நிறையுமானால் கர்த்தர் நம்மை மரணாந்தகாரமான இருண்ட  தேசத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில்லை.  எப்படியென்றால் கஷ்டங்களையும் பாடுகளையும் வேதனைகளையும் சகித்து, கர்த்தர் தருகிற சோதனையை ஜெயிக்கும்படி நம்மை புதுபித்து கிறிஸ்துவினால் இரட்சிக்கபட்டால் நமக்கு ஆனந்த சந்தோஷம் அடைய செய்து கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.