தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யூதா 1:21
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம், பெற்றுக்கொண்ட ஜீவனை அரோசிப்பேன் என்று சொல்லாமல் அந்த ஜீவனை முற்றுமுடிய காத்துக்கொள்ளவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மிடம் கர்த்தர் யார் மூலம் அவர் வார்த்தைகளை தந்தாலும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 9:14- 23
இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்?
நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன்.
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார்.
மேற்கூறபட்ட வசனங்களில் பல காரியங்களை பேசி விட்டு பின்பு யோபு சொன்னது; இப்படியிருக்க கர்த்தருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடு வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? என்று சொல்லி அவன் சொன்னது நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடு வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்கு கெஞ்சுவேன். அப்படியாக நான் கெஞ்சினாலும் அவர் எனக்கு உத்தரவு கொடுத்தாலும், அவர் என் விண்ணப்பத்துக்கு செவிக்கொடுத்தார் என்று நம்பேன். அவ்விதம் இருந்து கொண்டு நினைத்த நினைவு என்னவென்றால் அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். மேலும் என்னை மூச்சுவிட இடங்கொடாமல் என்னை கசப்பினால் நிரப்புகிறார். பெலத்தை பார்த்தால் அவரே பெலத்தவர்; என் பட்சத்தில் எனக்காக சாட்சி சொல்லுகிறவன் இல்லை என்பதால் நான் என்னை நீதிமான் என்று சொன்னாலும் என் வாயே என்னை குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்றாலும் நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிசொல்லும். நான் உத்தமன் என்றால் என் உள்ளத்தை நான் அறியேன்; தான் ஜீவனை அரோசிப்பேன்.ஒரு காரியம் சொல்கிறேன்; அவர் சன்மார்க்கனையும், துன்மார்க்கனையும் அழிக்கிறார். சவுக்கானது அசுப்பிலே வாதித்து கொல்லுவது போல, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையை பார்த்து நகைக்கிறார் என்கிறான்.
பிரியமானவர்களே, யோபுவை போல அநேகர் நாம் நம்மையே நீதிமானாக்கி வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். யோபுக்கு வந்த சோதனை தான் நமக்கு வந்தது என்று வாய் நிறைய பேசுகிறோம். யோபுக்கு ஏன் சோதனை வந்தது என்று முழு அத்தியாயங்களும் ஆவியில் படித்து ஆராய்ந்துக் கொள்ள வேண்டும். அல்லாமல் யோபுவை போல சன்மார்க்க உள்ளமும் வைத்துக்கொண்டு, தங்களை குற்றமில்லாதவர்களை போல காட்டினால் சோதனையிலிருந்து வெளியில் வரமுடியாது. அவன் எப்படி சோதனையிலிருந்து வெளியில் வந்தான் என்று உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாட்கள் போகும் போது வரிசையில் வார்த்தைகள் தியானிக்கும் போது யோபுக்கு எப்போது உணர்வு வருகிறது புரியும். அல்லாமலும் அவன் நீதிமானா? சன்மார்க்கனா?என்று புரியும். கர்த்தர் அவனை நீதிமான் என்று சொல்கிறாரா: இல்லை சன்மார்க்கன் என்று சொல்கிறாரா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தனை செய்ய வேண்டும். மற்றவர்கள் சொல்வதை கேட்டு நாம் அப்படி விழுந்து விடாமல் வேத வசனம் நாம் ஆவியில் பொறுமையோடு தியானித்து கர்த்தரிடத்திலிருந்து அதன் காரியங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லாமல் நம்முடைய உள்ளம் தவறான உபதேசத்துக்கு இடம்கொடாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் கஷ்டங்கள் வரும் போது என் ஜீவனை அரோசிப்பேன் என்று சொல்லாமல் நம் குற்றங்களை உணர்ந்து தேவ சமூகத்தில் பாவ அறிக்கை செய்து நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.