தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 4:6

உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடம் கர்த்தர் யார் மூலம் அவர் வார்த்தைகளை தந்தாலும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாக நாம் உத்தமமும், செம்மையுமாய் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்து என்னவென்றால் 

யோபு 9:1-11

அதற்கு யோபு பிரதியுத்தரமாக:

ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?

அவர் அவனோடே வழக்காடச் சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?

அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.

பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.

அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.

அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர்.

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்.

மேற்கூறபட்ட வசனங்களில் சூகியனான பில்தாத் பேசின கர்த்தருடைய வார்த்தைக்கு யோபு பிரதியுத்தரம் சொல்வது என்னவென்றால் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி; அவன் அவ்விதம் பேசுகிறதற்கு காரியம் என்னவென்றால் கர்த்தர் ஒருவர் தான் நீதிமான் இவ்வுலகில் உண்டென்றும், அவர் அவனோடே வழக்காட சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டேனே என்று சொல்வது நீதிமானோடே அவருக்கு வழக்கு இல்லை என்பது விளங்குகிறது.  மேலும் யோபு கர்த்தரை பற்றி கூறுகிற காரியங்கள் அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமுள்ளவர்; அவருக்கு விரோதமாக யாரும் தன்னை கடினபடுத்தி வாழ முடியாது  என்பதையும்; மனுஷன் எப்பேற்பட்டவனாக வாழ்ந்தாலும் அவர் கோபத்தினால் அவன் வாழ்வை அப்படியே மாற்றிவிடுவார் என்றும், பூமியின் தூண்களாக காணப்படுகிற உள்ளங்களை அதின் ஸ்தானங்களிலிருந்து (விசுவாச ஜீவிதத்திலிருந்து) அசையப்பண்ணுகிறவரும், சூரியனுக்கு கட்டளையிட அது உதிக்காதிருக்கும், நட்சத்திரங்களை மறைத்து போடுகிறார் என்றும், அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர் என்றும், அவர் துருவ நட்சத்திரங்களையும், மிருக சீரிஷத்தையிம், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர் என்றும் ஆராய்ந்து முடியாத காரியங்களையும் எண்ணி முடியாத அதியங்களையும் செய்கிறார்.  அவர் இதோ என் அருகில் போகிறார்  நான் அவரை காணேன், அவர் கடந்து போகிறார், நான் அவரை அறியேன், பறித்துக் கொண்டு போகிறார், அவரை மறிப்பவன் யார்? அவன் செய்கிற காரியங்களை என்ன செய்கிறீர் என்று யாராலும் கேட்க முடியாது.  இப்படியெல்லாம் தேவனுடைய பராக்கிரமத்தை குறித்து யோபு பேசி விட்டு; அவர் கோபத்தை தம்மை விட்டு திருப்ப மாட்டார்; ஒருவருக்கொருவர் துணை நிற்கிற அகங்காரிகள் அடங்க வேண்டும் என்று சொல்கிறான். 

பிரியமானவர்களே, யோபுடத்தில் சுகியனான பில்தாத் பேசின வார்த்தைகளால் அவன் கடினமாய் நடந்து கொள்கிறான் என்னவென்றால யோபு மறைவான வார்த்தைகளால் அவனை குற்றப்படுத்துகிறான்.  அதுமாத்திரமல்ல தோமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாத்தும் அவர்கள் ஒருவரோடொருவர் துணையாக நின்று யோபின் குற்றத்தை உணர்த்துகிறார்கள் என்று அவர்களை குற்றப்படுத்தி தன் இருதயத்தில் வைராக்கியத்தோடு பேசுகிறான். இப்படி தான் நம்மிலும் அநேகர் நம் குற்றத்தை உணர்ந்து கர்த்தரிடத்தில் தாழ்மைப்படாமல் நம்மில் ஒரு குற்றமும் இல்லாமல் இருக்கிறோம் என்று நினைத்து மற்றவர்களிடத்தில் வைராக்கியத்தோடு இருதயத்தை கடினப்படுத்துகிறோம்.  அவ்விதம் நம் இருதயம் கடினபட்டால் நம்முடைய வாழ்வு தான் பாதிக்கும் என்று நினைத்து காரியங்களை நன்றாக ஆராய்ந்து சிந்தித்து தாழ்மைப்படுவோமானால் கர்த்தர் நமக்கு சீக்கிரத்தில் இரக்கம் காட்டுவார். இப்படியாக இந்த வார்த்தைகளை வாசிக்கிற யாருடைய வாழ்வானது இருக்குமானால் நாம் உடனே உணர்வடைந்து நம்மை தாழ்மைப்படுத்திக்கொண்டால் நாம் சீக்கீரத்தில் கர்த்தரிடத்திலிருந்து கிருபை பெற்றுக்கொள்ளலாம். இப்படியாக கர்த்தரிடத்திலிருந்து இரக்கமும், கிருபையும் பெற்றுக்கொள்ளும்படியாக நம்மை கர்ததரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.