தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 71:14

நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நமக்கு நெருக்கங்கள் வந்து வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது கர்த்தரிடத்தில் ஏன் இவ்விதம் சம்பவிக்கிறது என்று கேள்வி எழுப்பக் கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆவியினால் நிரப்பப்பட்டு நம் உள்ளம் பெலனடைய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 7:16-21 

இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.

மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,

காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.

மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?

என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யோபு வேதனையால் பேசின வார்த்தையில் மரணத்தை விரும்புகிறேன் என்று சொல்லி; என் வாழ்வை அரோசிக்கிறேன், எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே என்றும், மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன் மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலை தோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனை சோதிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்.  மேலும் அவன் கர்த்தரிடத்தில் கேட்டது என் உமிழ்நீரை விழுங்காதபடிக்கு எத்தனைகாலம் என்னை நெகிழவிடாமலும்,  என்னை விடாமலும் இருப்பீர்.  மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ் செய்தேனானால் உமக்கு நான் செய்ய வேண்டியது என்ன? என்றும் எனக்கு தானே பாரமாயிராதபடிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன? என் மீறுதலை மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன ? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திற்கு என்னை தேடுவீரானால் நான் இரேன் என்கிறான். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகளினால் நாம் புரிந்துக்கொள்வது யோபு தான் அனுபவித்துக்கொண்டிருக்கிற கொடிய வேதனை தொடர்ந்து கொண்டிருக்க தாங்காத வேதனையால் பேசுகிறான் என்பது தெரிகிறது. இவ்வித கொடிய வேதனை அனுபவித்தாலும் தான் பாவமன்னிப்பு கேட்காமல், கர்த்தரிடத்தில் கேள்வி எழுப்பி தன் வருத்தத்தை கூறுகிறான்.  ஆதலால் கர்த்தரிடத்திலிருந்து விடுதலைக்கேற்ற மறுபடி வராமல் காணப்படுகிறது.  அதுபோல நாமும் பல வேதனைகள் அனுபவிக்கும் போது பாவஅறிக்கை செய்வதை விட்டு விட்டு கேள்வி கர்த்தரிடத்தில் எழுப்புவதற்கு எந்த உரிமையும் நமக்கு இல்லை என்பதனை உணர்ந்து கர்த்தரிடத்தில் நம்வாழ்வை புதுபித்து தரும்படியாக பாவஅறிக்கை செய்து மீட்பை பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.