தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 2:4,5
உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆவியினால் நிரப்பப்பட்டு நம் உள்ளம் பெலனடைய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் நம்மை கடிந்துக்கொள்ளும் போது ஏற்றுக்கொள்கிற இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 7:1-15
பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது.
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,
நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.
மேற்கூறிய வசனங்களில் யோபு தனக்குள்ளே கர்த்தரிடத்தில் கேள்வி எழுப்பி தன் சஞ்சலத்தை ஊற்றுகிறதை வாசிக்க முடிகிறது. இந்த சஞ்சலத்தால் கலக்கமான வார்த்தைகளால் தேவனோடு பேசுகிறான். இந்த வார்த்தையாவது மனுஷனுக்கு பூமியிலே போராட ஒரு குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவா என்றும் அவன் நாட்கள் ஒரு கூலிக்காரனுடைய நாட்கள் போல் இருக்கிறது என்றும், ஒரு வேலையாள் நிழலை தேடியிருப்பது, ஒரு கூலிக்காரன் தன் கூலி வர காத்திருக்கிறது போல மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்லமான ராத்திரி குறிக்கப்பட்டது என்றும், தன் வாழ்க்கையில் அனுபவிக்கிற கஷ்டங்களை ஒவ்வொன்றாக சொல்லி அவன் சொல்வது என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதை பார்க்கிலும் மரணத்தை விரும்புகிறது. ஆதலால்
பிரியமானவர்களே யோபு தன் வாழ்வில் பல வேதனையான வார்த்தைகளால் கர்த்தரிடத்தில் கலங்குகிறான். இப்படி நாம் கலக்கத்திற்குரியவர்களாகாமல் இருக்கும்படியாக கர்த்தர் அவர் ஆவியினால் நம் உள்ளத்தை நிரப்பும்போது, நம் ஆத்துமா சோர்ந்து போகாமல் பெலனடைந்து எழும்புகிறது. இப்படி கிறிஸ்துவின் ஆவியினால் பெலனடையும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.