தேவனுக்கே மகிமையுண்டாவதாக  

நீதிமொழிகள் 9:8

பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கடிந்துக்கொள்தலை ஏற்றுக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 6:10- 16

அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.

நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது?

என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?

எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே.

உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.

என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.

அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,

மேற்கூறபட்ட கர்த்தருடைய வார்த்தையில் எலிப்பாசிடம் யோபு பல காரியங்களை தன் கஷ்டத்தினால் பேசினபின்பு சொல்வதாவது அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் கிடைத்திருக்குமே; அப்போது தப்பவிடாத நோவினால் மரத்திருப்பேன்; பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னை தப்பவிடமாட்டார் என்றும்; நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப் பண்ண என் முடிவு எப்படிபட்டது? என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ என்றும் சொல்லி தனக்கு உதவியாக பேசவில்லை என்கிறதால் அவன் சொல்வது; உபாதிக்கப்படுகிறவனுக்கு சிநேகிதனால் தயை கிடைக்க வேண்டுமல்லவா; அல்லாமல் இருக்கிறதினால் அவன் சர்வ வல்லவருக்கு பயப்படாதே போகிறான் என்றும்; சகோதரர் காட்டாறுப் போல் மோசம் பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப் போல்க் கடந்து போகிறார்கள்; அவர்களை குறித்து  யோபு சொல்வது 

யோபு 6:17-30 

உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல் பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.

அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.

தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,

தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.

அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;

அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிக்காரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?

எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?

கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?

இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.

இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.

நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.

என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?

மேலே கூறப்பட்ட வார்த்தைகளினால் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறான். அந்த வார்த்தைகள் என்னவென்றால் கடிந்து கொண்டதின் நிமித்தம் தன் உள்ளம் வேதனையோடு பேசினதை வாசிக்க முடிகிறது.  மேலும் அவன் தன்னிடத்தில் தவறு இல்லை என்றும்; அவர்கள் செம்மையான வார்த்தைகளை தனக்கு ஏற்றபிரகாரம் பேசவில்லை என்றும்; சிநேகிதன் கடிந்துக் கொண்ட காரியம் என்ன என்றும்; இவ்விதம் வார்த்தைகளினால் அவன் மேல் விழுந்து அவனுக்கு படுகுழியை வெட்டுகிறார்கள் என்றும் சிநேகிதனிடத்தில் பேசி; இப்போதும் உங்களுக்கு சித்தமானால் என்னை நோக்கி பாருங்கள்; அப்போது நான் பொய் சொல்கிறேனோ என்று பிரத்தியட்சமாய் விளங்கும் என்று சொல்லை அவர்களை அனுப்பி விடும்படியாக அவன் சொல்வது ; நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணபடாதிருக்கும்; திரும்புங்கள் என்நீதி அதிலே விளங்கும் என்றும்; என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் ஆவி ஆகாதவைகளை பகுத்தறியாதோ என்றெல்லாம் யோபு பேசுவதன் காரணம் என்னவென்றால் குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ என்று சிநேகிதன் கேட்டதினால் இவ்வளவு வார்த்தைகளையும் தன் வேதனையில் பேசி தீர்க்கிறான்.  இப்படி தான் நாமும் நம்மை குறித்து யாராவது தப்பிதங்களை எடுத்து சொல்லிவிட்டால் பொறுக்க மாட்டோம்.  பிரியமானவர்களே இப்படியாக நாம் இருந்தால் கர்த்தரிடத்திலிருந்து சீக்கிரத்தில் விடுதலைப் பெற்றுக்கொள்ள முடியாது.  ஆதலால் கர்த்தர் நம்மை கடிந்துக் கொள்ளும் போது ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்போது கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டு எல்லாவிதத்திலும் நன்மையான பலனை நமக்கு தந்தருளுவார்.  இப்படியாக கடிந்துக் கொள்ளுதலை ஏற்றுக்கொள்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.