தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 16:11

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நித்திய பேரின்ப பாக்கியத்தை அடைகிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய முழு குடும்பமும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 5:12-18 

தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.

அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவித் திரிகிறார்கள்.

ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.

அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.

இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.

மேற்கூறப்பட வசனங்களில் கர்த்தர் எவ்விதம் சாத்தானாகிய தந்திரகாரனை பிடிக்கிறாரென்றால் இவன்; காரியங்களை நடத்தகூடாதபடி செய்கிற உபாயங்களை கர்த்தர் அபத்தமாக்குகிறார். அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரனின் ஆலோசனையை கவிழ்க்கிறார். அவர்கள் பகர்காலத்திலே அந்தக்காரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத் தடவுகிறார்கள்.  எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.  அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது அவன் வாயை மூடும்.  மேலும் அவன் சொல்கிற கர்த்தருடைய வார்த்தையாவது

யோபு 5:17-18 

இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.

மேற்கூறப்படவசனங்களில் கர்த்தர் நம்முடைய குற்றங்களினால் நம்மை தண்டிக்கிறவரும், நம்மை காயப்படுத்துகிறவரும், அடிக்கிறவருமாயிருக்கிறார்.  ஆதலால் அவர் சிட்சிக்கும் போது அதனை ஏற்றுக்கொண்டு, அற்பமாக எண்ணாமல் நம் குற்றங்களை உணர்ந்துக் கொள்வோமானால் அவருடைய தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வோம்.  மேலும் நம்மை காயப்படுத்தினால் காயங்கட்டுகிறவராகவும், அவருடைய அடித்த கை நம்மை ஆற்றுகிறதாயிருக்கிறது.  ஆதலால் 

பிரியமானவர்களே,  நாம் செய்கிற காரியங்கள் கைகூடிவரபண்ணாமல் தடுக்கிற தந்திரகாரரின் உபாயங்களை கர்த்தர் அபத்தமாக்குகிறார்.  மேலும் ஞானிகளை அவர்கள் தந்திரத்தினாலே பிடிக்கிறார்.  திரியாவரக்காரனுடைய ஆலோசனைகளையெல்லாம் கர்த்தர் கவிழ்த்துப்போடுகிறார்.  நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக கர்த்தருக்கு கீழ்படிவோமானால் நம்மை அவ்வித பலவான்களின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். ஆதலால் நாம் எவ்விதமான தரித்திரனாக இருந்தாலும் லாசருவை போல் கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையை விட்டுவிடாமல் பற்றிக்கொள்வோமானால் முடிவில் அது நமக்கு ஆசீர்வாதமாகவே விளங்கும்.  ஆதலால்   கர்த்தரின் வசனம் என்ன சொல்கிறது என்றால் 

லூக்கா 16:22 

பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

மேற்கூறிய வசனபிரகாரம்  நித்திய பேரின்ப பாக்கியத்தை கர்த்தர் தந்து நம்மை எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கும்படியாக கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.