தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய முழு குடும்பமும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 5:1-11
இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத் தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை, வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தோமானியனான எலிப்பாஸ் யோபிடம் சொல்வது இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கி பார்ப்பீர்? கோபம் நிர்மூடனை கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும். நிர்மூடன் ஒருவனை வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தை சபித்தேன் என்று சொல்லி போபுடைய பிள்ளைகள் இரட்சிப்பு இல்லாமல் கர்த்தருக்கு தூரமாகி வாசலிலே நொறுக்கப்பட்டார்கள் என்றும்; பின்னும் அவன் சொன்னது பிள்ளைகளுக்குள் உலகமாகிய சிற்றின்பங்களினால் பறிகாரனாகிய சாத்தான் ஆஸ்தியை விழுங்கினான். மேலும் அவன் சொன்னது தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதில்லை, வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. எப்படியென்றால் அக்கினி பொறி மேலே பறக்கிறது போல மனுஷன் வருத்தம் அனுபவிக்க பிறந்திருக்கிறான். ஆனாலும் நாம் தேவனை தேடி நியாயத்தை தேவனித்தில் ஒப்புவிப்போமானால்; தேவன் செய்வது என்னவென்றால்
யோபு 5:9-11
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
மேற்கூறிய வார்த்தைகளால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம் நிலமாகிய உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நிறைக்கிறார்; அந்த ஆசீர்வாதத்தினால் வெளி நிலமாகிய இரட்சிக்கப்படாமல் இருக்கிறவர்கள் மேல் கர்த்தரில் வசனம் சென்று அவர்களை இரட்சிக்கும். ஆதலால் இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால் கோபம் புறப்படுவது நிர்மூடர்களாயிருக்கும் போதும்; அந்த கோபம் பிரயோஜனமற்றதும்; நமக்கு எத்த்னை தீமைகள் வந்தாலும் கர்த்தரால் உள்ள நியாயப்பாதைகளில் நடப்போமானால் அவர் ஆராய்து முடியாத காரியங்களையும்; எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்து; நம்மை உயர்த்துவார் என்றும்; நம்முடைய துக்கத்தையும் மாற்றி இரட்சித்து உயர்த்துவார் என்றும்; மற்றும் நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருந்தால், அந்த அபிஷேகம் நம்முடைய வீட்டில் உள்ள பிள்ளைகளையும் இரட்சிக்கும் என்கிறதால் நாம் பெற்ற அபிஷேகத்தால் பிள்ளைகளை உலகமாகிய சிற்றின்ப வாழ்விலிருக்கிற பிள்ளைகள் கர்த்தருடைய வசனத்தால் கர்த்தரிடத்தில் மனந்திரும்பி இரட்சிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.