தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 62:8 

இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் தந்த ஆசீர்வாதங்கள் கர்த்தரால் என்றென்றும் நம்மில் தங்கியிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்திற்குள் துன்மார்க்கமோ, சன்மார்க்கங்களோ இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 1:7 

கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

மேற்கூறபட்ட வசனங்களில் சாத்தான் கர்த்தரிடம் பூமியெங்கும் சுற்றி உலாவி வருகிறேன் என்று சொன்னபிறகு கர்த்தர் சாத்தானிடம் கேட்டது 

யோபு 1:8 

கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

மேற்கூறபட்ட வார்த்தகளை கர்த்தர் சாத்தானிடம் சொல்ல சாத்தான் கர்த்தருக்கு பிரதியுத்தரமாக யோபு விருதாவாகவா தேவனுக்கு பயந்து நடக்கிறான் என்றும் நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்ததினால் அவன் சம்பத்து பூமியில் பெருகினது.  ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவைகளையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது உமது முகத்துக்கு எதிரே உம்மை தூஷிக்கானோ பாரும் என்றான்.  அதற்கு கர்த்தர் சாத்தானை நோக்கி சொன்னது 

யோபு 1:12 

 கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

இப்படியாக கர்த்தர் சொன்னவுடன் அவன் கர்த்தரின் சந்நிதியை விட்டு புறப்பட்டு போனான்.  பிரியமானவர்களே மேற்கூறபட்ட வசனங்கள் நாம் தியானிக்கும் போது எல்லாம் கர்த்தரின் சந்நதியில் வைத்து சம்பவிக்கிறது.  கர்த்தரின் சந்நிதி என்றால் நம் இருதயத்திற்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவெனில் சாத்தான் நம் உள்ளத்தில் உலாவுகிறான் என்றால் அவன் அவகாசிகளாக நாம் இருக்கிறோமா, இல்லையா என்பதனை பாரக்கிறான்.  அல்லாமலும் கர்த்தரே சாத்தானை நம்மை திருத்துவதற்கு ஒரு கோலாக பிரயோஜனப்படுத்துவதினால் அவர் சாத்தானிடம் என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ என்றும், அவன் உத்தமன் என்றும் சன்மார்க்கன் என்றும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனை போல் பூமியில் ஒருவனும் இல்லை என்றார். இதனை கேட்ட சாத்தான் அவனை தேவன் ஆசீர்வதித்ததினால் அவன் ஆசீர்வாதத்தை அவனால் தொடமுடியாத காரணத்தால் கர்த்தரிடம் சொல்கிறான் நீர் உமது கையை நீட்டி அவனுக்கு உண்டானவைகளையெல்லாம் தொடுவீரானால் உமது முகத்துக்கு எதிரே உம்மை தூஷிக்கானோ பாரும் என்கிறான்.  அதற்கு கர்த்தர் அவனை சோதனை செய்யும்படி சாத்தானுடைய கையில் விட்டு விட்டு, அவன் பிராணனை மட்டும் தொடாதே என்று சொன்னவுடன் ; சாத்தான் கர்த்தரின் சந்நிதியிலிருந்து புறப்பட்டு போகிறான். ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒரு போதும் சாத்தான் கையில் கர்த்தர் நம்மை ஒப்புக்கொடாதபடிக்கு சன்மார்க்க கிரியைகள் நம்மிடத்தில் வராதபடி பாதுகாத்துக்கொள்ளும்படி ஜாக்கிரதையுள்ளவர்களாக நடந்து, கர்த்தர் நமக்கு தந்த ஆசீர்வாதங்கள் என்றென்றும் கர்த்தரால் ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.