தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:76 

நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய வழியை அனுதினம் நம்மை நாமே சோதித்தறிய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்து எல்லாரிலும், எல்லாவற்றிலும் பெரியவராயிருக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 1:1-5 

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.

அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.

விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் போபு என்கிற கர்த்தரின் ஊழியக்காரனைக் குறித்து எழுத்தப்பட்டுள்ளது.  இவன் தேசம் ஊத்ஸ் என்றும், இவன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.  அவனுக்கு ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.  அவனுக்கு உண்டாயிருந்த ஐஸ்வரியங்கள் 

யோபு 1:3 

அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

அவன் மிகுந்த சம்பன்னனாயிருந்தான்.  அவன் கிழகத்தி புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.  அவன் குமாரர் அவனவன் தன்தன் நாளிலே தன் வீட்டிலே விருந்து செய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்து செய்கிற அவரவருடைய நாள் முடிகிற போது யோபு சொன்னது; என் குமாரர் ஒருவேளை பாவஞ் செய்து தேவனை தங்கள் இருதயத்தில் தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளை செலுத்துவான், இந்த பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின்படி நாம் தியானிக்கையில் யோபுடைய வாழ்வில் சம்பவித்த காரியங்களை குறித்தும், அவன் தன் வாழ்வில் எப்படி நடந்துக்கொண்டான் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டது. மேலும் அவன் வாழ்வு எவ்வண்ணமாய் முடிந்தது என்று தொடர்ந்து பார்ப்போம். ஆதலால் பிரியமானவர்களே நாம் எல்லோரும் நம்முடைய வாழ்வை பற்றி அனுதினம் அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்க வேண்டும்; என்னவென்றால் நாமும் நம் குடும்பமும் கர்த்தரின் பாதையில் தானா அனுதினம் பிரவேசிக்கிறோமா இல்லையோ என்று அனுதினம் நம்மை நாமே சோதித்தறியும்படியாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.