தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:165

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்து எல்லாரிலும், எல்லாவற்றிலும் பெரியவராயிருக்கிறார். 

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தத்தின் நினைவு கூருதலை அனுதினம் கொண்டாடி, மகிழ்ந்து களிகூர்ந்து கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

எஸ்தர் 10:1-3 

ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.

வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

மேற்கூறிய வசனங்களில்  ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜா தேசத்தின் மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின் மேலும் பகுதி ஏற்படுத்தினான்.  வல்லமையும் பராக்கிரமுமான ராஜாவின் எல்லா செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்தாப்பியமும் மேதியா பெர்சிய ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் எழுதபட்டிருக்கிறது.  என்னவெனில் மொர்தெகாய் ராஜாவுக்கு இரண்டாதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்கு பிரியமானவனாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாக பேசுகிறவனுமாயிருந்தான்.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வார்த்தைகளின்படியே கர்த்தராகிய இயேசு நம் எல்லாருக்கும் ராஜாதி ராஜாவாக விளங்குகிறார் என்பதும், நம் ஆத்துமா சிறையிருப்பிலிருந்து விடுதலையாகி மீட்கபட்டால் அதனை கர்த்தர் பரலோகத்தின் கிருபைகளாகிய மேன்மைகளால் அலங்கரிக்கிறார் என்றும், கிறிஸ்து எல்லாரிலும் பெரியவராயிருந்து மேன்மையுள்ளவராக விளங்குவார் என்றும், திரளான ஜனங்களுக்கு பிரியமான சகோதரர் என்னபடுவார் என்றும், தன் ஜனங்களுடைய நன்மைகளுக்காக சமாதானமுண்டாக பேசுவார் என்றும் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.   ஆதலால் நமக்குள் வாழ்கிற கிறிஸ்துவே நம் எல்லாரிலும் பெரியவராயிருக்கும்படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.