தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 97:12
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தத்தின் நினைவு கூருதலை அனுதினம் கொண்டாடி, மகிழ்ந்து களிகூர்ந்து கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் கிறிஸ்துவோடு விருந்துண்டு சந்தோஷமாய் கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
எஸ்தர் 9:20-32
ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார் மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.
பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.
யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடு பண்ணினதும், அவர்கள் தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள் மேலும் தங்கள் சந்ததியார் மேலும் கடனாக நியமித்துக் கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,
அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.
இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப் பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.
மேற்கூறிய வசனங்களில் யூதனாகிய மொர்தெகாய் யூதருக்கு வந்த விடுதலையை குறித்த வர்த்தமானங்களை எழுதி சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை எழுதி அனுப்பி வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினைந்தாம் தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாளாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, விருந்துண்டு சந்தோஷம் கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்கு தான தர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம் பண்ணினான். இவ்விதம் யூதர் தாங்கள் செய்யதொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்ய சம்மதித்தார்கள். மேலும் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் எப்படி வந்ததென்றும், அந்த பண்டிகை நாட்கள் தவறிப்போகாமலும் அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்து போகாமலும் இருக்க வேண்டுமென்றும், தங்கள் மேலும், தங்கள் சந்ததியாரின் மேலும், தங்கள் மார்க்கத்தில் அமைய போகிற மற்ற யாவர் மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள். பூரீம் என்பது ஆமான் யூதருக்கு விரோதமாக நினைத்த பொல்லாத நினைவுகளை அவனுடைய தலையின் மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினால் அவனையும், அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப் போட்டார்கள். அந்த நாள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது. பூரீம் என்னும் நாட்களை குறித்து, ராஜாவும் , ராஜாத்தியும் யூதருக்கு உறுதிப்பாடு பண்ணினதும், அவர்கள் தானே உபவாசத்தோடும், அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள் மேலும் தங்கள் சந்ததியார் மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னும் நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் என்னும் காரியத்தை உறுதியாக்க அகாஸ்வேரு ராஜாவின் நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை எழுதினான். இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களை பற்றின இந்த வர்த்தமானங்களை திடப்படுத்தினது; ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் யூதருக்குள்ளே என்பது ஆத்துமா இரட்சிக்கபட்டவர்களுக்குள்ளே (உலக ராஜ்யம் மாற்றப்பட்டு) தேவனுடைய ராஐ்யம் உள்ளத்தில் ஸ்தாபிக்கப்பட்டால், நம்முடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், நம்முடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின நாட்களை ஆசரித்து; கர்த்தருடைய பரிசுத்த பந்தியில் பங்குப்பெற்று; இவ்விதம் கர்த்தரின் பாதத்தில் விருந்து கொண்டாடி கர்த்தரை சந்தோஷப்படுத்தும் போது, நம்முடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், துக்கம் மாறி மகிழ்ச்சி உண்டாகும்.இப்படியாக நம் ஆத்துமாவை கர்த்தர் பரிசுத்தப்படுத்தினதால், அந்த நாளை கர்த்தரின் பரிசுத்த நாள் என்றும், கர்த்தருக்கு பரிசுத்தமானது நித்திய நாளாக ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறதினால், நாம் கர்த்தரை பரிசுத்த அலங்காரத்தோடு தொழுதுக்கொண்டு, கர்த்தரை அனுதினம் பாடி , துதி செய்து கர்த்தருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை அனுதினம் நம் உள்ளத்திற்குள் கொண்டாடி நினைவு கூர்ந்து மகிழ்கொண்டாட வேண்டும். இப்படியாக நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்குள் வாழும்படியாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.