தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1தெசலோனிக்கேயர் 5:16

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் கிறிஸ்துவோடு விருந்துண்டு  சந்தோஷமாய் கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடிசைந்தால் கர்த்தர் நம்மோடிசைந்து நம்மை தீமையினின்று விடுவித்து காத்து இரட்சிப்பார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

எஸ்தர் 9:15-18 

சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் எஸ்தர் ராஜாத்தி கேட்ட மன்றாட்டுக்கு தக்க ராஜவின் கட்டளையின்படி யூதர்கள் ஆமானின் பத்து குமாரரின் உடலையும் தூக்கிப்போட்ட பின்பு, சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடி சேர்ந்து முந்நூறு பேரை கொன்று போட்டார்கள. ஆனாலும் கொள்ளையிட தங்கள் கையை நீட்டவில்லை .  ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனை தற்காக்கவும், தங்கள் பகைவருக்கு விலகி  இளைப்பாறுதல் அடையவும் தங்கள் விரோங்களில்  எழுபத்தையாயிரம் பேரை ஒருமிக்க கூடிக்கொன்றுப்போட்டார்கள்.  ஆனாலும் கொள்ளையிட தங்கள் கைகளை நீட்டவில்லை.   மேலும் ஆதார் மாதத்தில் இப்படி செய்து அதே மாதத்தில் இளைப்பாறி, அதனை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.  சூசானிலுள்ள யூதரோவெனில்  ஆதார் மாதத்தின் பதிமூன்றாம்,பதினான்காம் தேதியிலும் ஏகமாய் கூடி பதினைந்தாம் தேதியில் இளைப்பாறி விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நம்முடைய இரட்சிப்புக்கு மாறான கிரியைகளை நம் உள்ளத்தில் சாத்தான் எழுப்பாதபடி அதன் கிரியைகள் வெளிப்படாதபடி முற்றிலும் அழித்து  நாம் கிறிஸ்துவோடு  அன்பின் விருந்துண்டு (அப்பம் புசித்து) பண்டிகை  கொண்டாடுகிற நாளாக நம்முடைய அனுதின ஜீவிதத்தை நாம் மாற்றி அமைப்போமானால் அது நமக்கு நித்திய சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.  இப்படி நம்மை கர்த்தருக்காய் ஒப்புக்கொடுத்து சத்துருவை ஜெயித்து பரிசுத்தத்தை காத்துக்கொண்டு கிறிஸ்துவோடுகூட விருந்துண்டு சந்தோஷமாக கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.