தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை காக்கும்படியாக கிறிஸ்து ஆவியின் பட்டயமாகிய தேவ வசனத்தால் சத்துருக்களை அழித்து நம்மை இரட்சிக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கர்த்தர் எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார் என்பதனைக் திருஷ்டாந்தபடுத்தி எழுதியிருப்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 9:5-11
அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
பொராதா, அதலியா, அரிதாத்தா,
பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.
ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
மேற்கூறிய வசனங்களில் அகாஷ்வேரு ராஜாவின் கட்டளையினால் யூதா ஜனங்கள் தங்கள் சத்துருக்களையெல்லாம் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டபடி தங்கள் பகைஞருக்கு செய்தார்கள். அப்படியே யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறு பேரை கொன்று நிர்மூலமாக்கினார்கள். அப்படி செய்தாலும் கொள்ளையிட தங்கள் கைகளை நீட்டவில்லை. சூசான் அரமனையில் கொன்றுப்போடபட்டவர்களின் தொகை ராஜசமூகத்தில் கொண்டுவரப்பட்டது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளின் கருத்துக்கள் என்னவெனில், கிறிஸ்துவை தரித்துக்கொண்டவர்களின் வாழ்வில் கிறிஸ்து எல்லாரிலும் பெரியவராயிருந்து, நமக்கு எதிராக கிரியை செய்துக் கொண்டிருக்கிற சத்துருக்களை நம் உள்ளமாகிய கிறிஸ்துவின் அரண்மனையில் தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தால் வெட்டி அழித்து நிர்மூலம் பண்ணுகிறார். அப்படி செய்வதால் நம் ஆத்துமாவில் தேவ பெலன் அவர் செய்கிற காரியம் தேவ சமுகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இப்படியாக நாம் கிறிஸ்துவுக்குள் வாழும் போது நம்முடைய இஷ்டபிரகாரம் கிறிஸ்து எல்லாகாரியங்களையும் நமக்காக செய்யும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.