தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 1:32

அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் எல்லாருக்குள்ளும் கர்த்தர் பெரியவராயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்துவின் வெளிச்சம், மகிழ்ச்சி, களிப்பு, கனம் இவைகள் உண்டாயிருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 9:1-4 

ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

மேற்கூறிய கர்த்தரின் வார்த்தைகளை தியானிக்கும் போது, ராஜாவின் வார்த்தையின்படியும், அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுவதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியிலே யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; ஆனால் யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படி காரியம் மாறுதலாய் முடிந்தது.  யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்கு பொல்லாப்பு வரப்பண்ணப் பார்த்தவர்கள் மேல் கைபோடக் கூடி வந்தார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களை பற்றிய சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.  நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்கு துணை நின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களை பிடித்தது.  மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று.  இந்த மொர்தெகாய்  மென்மேலும் பெரியவனானான்.  

பிரியமானவர்களே,  மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் யூதனாகிய, மொர்தெகாயை கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தி கர்த்தர் எழுதியிருக்கிறார்.  என்னவென்றால் யூதருக்கு எதிராக எழும்பின பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்ற போது யூதர்களே மேற்கொள்ளும்படியாக எல்லா காரியமும் மாறுதலாய் முடிந்தது.  ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்க கூடாதிருந்தது.  மற்றும் எல்லாவித அதிகாரிகளும் அவர்களுக்கு துணை நின்றார்கள்.  இப்படியாக தான் கிறிஸ்துவை தரித்துக்கொண்டால், அவரால் எல்லா காரியமும் நமக்கு பயங்கரமாய் முடியும். மற்றும் கிறிஸ்துவினால் தெரிந்தெடுக்கபட்டவர்களை அவர்கள் பகைஞர் யாரும் மேற்கொள்ள முடியாது என்பதும், அவர்கள் பகைஞரை தோற்கடிப்பார்கள் என்றும்,  இவ்விதம் கிறிஸ்துவின் மக்களுக்கு வரம் நல்ல ஆசீர்வாதங்களினால் அவர் பெயர் எல்லா இடமும் பிரசித்தமாகிறது; மட்டுமல்ல எல்லாருக்குள்ளும் அவர் பெரியவராய், வரவர மிகவும் பெயர் பெற்று விளங்குகிறார்.  இப்படியாக நம் எல்லாருக்குள்ளும் அவர் பெரியவராய் இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.