தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 8:19
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் வெளிச்சம், மகிழ்ச்சி, களிப்பு, கனமும், விருந்துக் கொண்டாடலும் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சபையாக கூடி கர்த்தரை ஆராதித்து சத்துருவை அழிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 8:12-17
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.
இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.
மேற்கூறபட்ட வசனங்களில் சூசான் அரமனையில் ராஜாவினால் பிறந்த கட்டளையினால் யூதர் தங்கள் பகைஞருக்கு சரிக்கு சரிகட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்க வேண்டும்படி அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காக கொடுக்கப்பட்ட கட்டளை பிரசித்தம் பண்ணப்பட்டது. அப்பொழுது மொர்தெகாய் இளநீலநூலும், வெள்ளயுமான ராஜவஸ்திரமும், பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது. இவ்விதம் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும் கனமும் உண்டாயிற்று. மேலும் ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய் சேர்ந்த எல்லா நாடுகளிலும், பட்டணங்களிலும் யூதருக்குள்ளே மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடலும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்கு பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களை பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் யூதர்கள் என்றால் உள்ளான யூதனானவனே யூதன் என்பதும், புறம்பான யூதன் யூதனல்ல என்பதும் கர்த்தரின் நியாயம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும் கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளின் உள்ளத்தில் ஒரு புதிய சிருஷ்டி உருவாகும். அந்த சிருஷ்டியானது உணர்வடைந்து கர்த்தரின் வசனத்தால் மகிமை பெற்று மகிமை மேல் மகிமை அடையும் போது கிறிஸ்து ராஜாவின் அலங்காரத்தோடு நம்மில் எழுப்புதல் அடைந்து சத்துருவோடு யுத்தம் செய்ய புறப்படுகிறார். அந்த எழுப்புதல் (கிறிஸ்து) எல்லா இடங்களில் பிரசித்தம் பண்ணப்படும். அந்த பிரசித்தமான தேவனுடைய கிருபையானது நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வந்து வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் விருந்து கொண்டாடுதலும் உண்டாகும், அதுமட்டுமல்ல நம்முடைய கலக்கங்கள் மாற்றப்படுகிறது. அப்போது நம்முடைய வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும். அப்போது நம்மை பார்க்கிறவர்களுடைய வாழ்வானது அந்த இரட்சிப்பை தானும் கண்டடையவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வந்து அவர்களும் இந்த ஜீவ மார்க்கத்தில் அமைந்துக்கொள்வார்கள் இப்படியாக நாம் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.