தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 97:10
கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சபையாக கூடி கர்த்தரை ஆராதித்து சத்துருவை அழிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு எதிராக சத்துரு வைத்த கையெழுத்தை கிறிஸ்து குலைக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 8:8-10
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.
சீலான் மாதம் என்ற மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந் தேதியாகிய அக்காலத்தில் தானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டு; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேச மட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டு, ராஜாவின் கட்டளையினால் அவருடைய பேரால் எழுதபட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைப் போடபட்டு, பின் குதிரைகள், வேகமான ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது. அவைகளில் ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலுமுள்ள, அந்தந்த பட்டணங்களிலுமுள்ள யூதர் ஒன்றாய் சேர்ந்து, தங்கள் பிராணனை காப்பாற்றவும், தங்களை விரோதிக்கிற சத்துருக்களாகிய ஜனத்தாரும், தேசத்தாருமான எல்லாரையும் அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்கு கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்கள் எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது என்றால் இரட்சிக்கப்பட்ட நம்முடைய ஆத்துமாவிற்கு விரோதமாக சத்துருவாகிய சாத்தான் ( உலகம் )நம்மை கெடுப்பதற்கு பதிலாக நாம் கிறிஸ்துவின் சபையார் ஒன்றுகூடி கர்த்தரை சத்திய வசனம் ஏற்றுக்கொண்டு ஆராதனை செய்து அதனை முழுமையாக அழிக்க கிறிஸ்து நமக்கு அதிகாரம் தந்து அவருடைய பரிசுத்த ஆவியால் நமக்கு முத்திரை போடுகிறார் என்பதும் அந்த முத்திரை சத்துருவோடு போராடி ஜெயம் பெற்றுக்கொள்ள காரணமாகிறது என்பதனை நாம் அறிந்து நம்மில் இருக்கிற உலக மோகமாகிய சத்துரு வளராமல் அழிக்கும்படியாக சபைகூடி ஆராதிக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.