தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசேயர் 2:14,15 

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு எதிராக சத்துரு வைத்த கையெழுத்தை கிறிஸ்து குலைக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் உலகமாகிய துஷ்ட ஆமான் குழிவெட்டாமல் காக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 8:1-3 

அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.

மேற்கூறபட்ட வசனங்களில் ஆமானை தூக்குமரத்தில் போட்டுவிட்ட பின்பு ராஜாவின்  உக்கிரம் தணிந்த அன்றைய தினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமூகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்தித்திருந்தாள்.  ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கி போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து மொர்தெகாய்க்கு கொடுத்ததுமன்றி,  எஸ்தர் மொர்தகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்து விட்டு, அவள் ராஜசமூகத்தில் பேசி, ராஜாவின் பாதத்தில் விழுந்து அழுது ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதமாக செய்ய நினைத்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.  பின்பு ராஜா செய்தது 

எஸ்தர் 8:4-6 

அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று:

ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.

என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.

மேற்கூறபட்ட வார்த்தைகளை   எஸ்தர் ராஜாவிடம் சொல்லி வருத்தபட ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும், யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ ஆமானின் வீட்டை எஸ்தர்க்குக் கொடுத்தேன்; அவன் யூதர்கள் மேல் கைபோட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப் போட்டார்கள்.  பின்னும் அவன் சொன்னது உங்களுக்கு இஷ்டமானபடி ராஜாவின் நாமத்தினால் எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பேரால் எழுதபட்டு முத்திரை போடபட்டதை செல்லாமற்போகபண்ண ஒருவராலும் கூடாது என்றான். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்டவைகளின் கருத்துக்கள் என்னவென்றால்  திருஷ்டாந்தத்தோடு விளக்கபட்டு இருக்கிறது.  அதென்னவென்றால் நாம் கர்த்தருடைய சித்தம் செய்து உண்மையுள்ளவர்களாயிருப்போமானால் நமக்கு  விரோதமாக இருந்த சத்துருக்களை அழித்து, ஜாதிகளின் அவகாசம் நமக்கு சொந்தமாக்கினதுமல்லாமல், நாம் அவரிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டிய விதத்தில் கேட்போமானால் நமக்கு எதிரடையாக இருந்த கையெழுத்தை கிறிஸ்துவினால் அந்த கையெழுத்தை குலைத்து, நாம் இஸ்ரவேல் சபைக்காகவும், நம்முடைய ஆத்துமா வஞ்சிக்கபடாமல் இருக்கவும், அதற்காக நாம் நினைக்கிறதை அவர் வெற்றியோடு நிறைவேற்றுகிறவராயிருக்கிறார்.  இவ்விதமாக கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.