தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 7:15,16
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் உலகமாகிய துஷ்ட ஆமான் குழிவெட்டாமல் காக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவிற்குள் இருக்கிற துஷ்ட பிசாசு அழிக்கப்படுகிறதற்கு முன் அதனை திகிலடைய செய்தல் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 7:8-10
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
மேற்கூறப்ட்ட வசனங்களில் ஆமானாகிய துஷ்டனுடைய செயலைக்குறித்து ராஜாத்தியாகிய எஸ்தர் ராஜாவிடம் அறிவித்ததை கேட்ட ஆமான் திகிலடைந்தவுடன் ராஜா உக்கிரகத்தோடே திராட்ச ரச பந்தியை விட்டெழுந்து, அரமனை தோட்டத்திற்கு போனதை கண்ட ஆமான் தனக்கு பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டது என்று கண்டு, ராஜத்தியாகிய எஸ்தரிடம் தன் பிராணனுக்காக விண்ணப்பம் பண்ண எழுந்து நின்றான். ராஜா அரமனை தோட்டத்திலிருந்து திராட்ச ரசம் பரிமாறபட்ட இடத்திற்கு திரும்பி வரும் போது ஆமான் எஸ்தர் உட்கார்ந்திருந்த மெத்தையின் மேல் விழுந்து கிடந்ததை கண்ட ராஜா நினைத்தது என்னவென்றல் இவன் என் கண்முன்னே ராஜாத்தியை பலவந்தம்பண்ண வேண்டுமென்றிருக்கிறானோ என்றான்: இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள். இதனை ராஜ சமூகத்தில் பிரதானியாகிய அற்போனா என்பவன் ராஜாவிடம் சொன்னது, ராஜாவின் நன்மைக்காக பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான் ; அப்பொழுது ராஜா அதிலே அவனை தூக்கிப்போடுங்கள் என்று சொல்ல ஆமான் மொர்தெகாய்க்கு செய்வித்த ஆயத்தம்பண்ணின தூக்குமரந்திலே ஆமானை தூக்கிப்போட்டார்கள். அப்பொழுது ராஜாவின் உக்கிரக கோபம் தணிந்தது.
பிரியமானவர்களே மேற்கூறபட்ட வசனங்களின்படி, நாம் யாருக்கு குழி வெட்டுகிறோமோ, அவர்களே அந்த குழியில் விழுவார்கள் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி திகிலடைந்திருந்த ஆமான், எஸ்தருடைய வார்த்தைகளினால் தனக்கு பிராண சேதம் வரும் என்பதனை கண்டு ராஜாத்தியை வணங்க சென்றது ராஜாவின் கண்களுக்கு தவறாக தெரிந்து, ராஜாவின் கோபம் ஆமானாகிய உலக மேன்மையை அழித்தது, நம்முடைய வாழ்விலும் கர்த்தரின் பந்தியில் உலகம் நம்மை பகைத்து நம்மை அழிக்க முன் வந்தாலும் அதுவும் முழுமையும் அழிந்துபோவதற்கே ஏதுவாகி கர்த்தரின் சித்தமாகிய பரலோக ராஜ்யம் நமக்குள் மேன்மைபட்டு விளங்குகிறது. இதனால் நம் ஆத்துமாவில் உலகமாகிய குழி வெட்டின ஆமானே அந்த குழிக்குள் விழுந்து அழிந்து போகும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.