தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 24:15
துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவிற்குள் இருக்கிற துஷ்ட பிசாசு அழிக்கப்படுகிறதற்கு முன் அதனை திகிலடைய செய்தல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில், கிறிஸ்துவின் ஜீவனும், சபையின் ஜனங்களுடைய பாதுகாப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 7:4-7
எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ணமுடியாது என்றாள்.
அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.
அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.
மேற்கூறிய வசனங்களில் ராஜாத்தியாகிய எஸ்தர் தனக்கு ஜீவனையும், ஜனங்களையும் ராஜாவிடம் கேட்டதுமல்லாமல் அவள் சொன்னது எங்களை அழித்து கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கபட்டு போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதே ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்த சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள். அதற்கு ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி இப்படி செய்ய துணிகரங்கொண்டவன் யார் என்று கேட்க எஸ்தர் சொன்னது; சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்த துஷ்டன் ஆமான் தான் என்ற போது ஆமான் ராஜாவுக்கும், ராஜாத்திக்கும் முன்பாக திகிலடைந்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வார்த்தைகளில் எழுதியிருக்கிறபடி, இரட்சிக்கபட்ட நம்முடைய ஆத்துமாவிற்குள், உலக மேன்மைகள் புகுந்து வருமானால் நம் ஆத்துமாவை அது அடிமைப்படுத்தி, நாம் பெற்றுக்கொண்ட ஜீவன் நஷ்படுவதற்கு ஏதுவாகிறதால், நமக்கு ஜீவன் தந்த கர்த்தருக்கு நஷ்டமாக காணப்படுவதால், அவர் அதனை அழிக்க சித்தமுள்ளவராகையால் அந்த துஷ்ட பிசாசானவனாகிய உலகமாகிய ஆமானை கர்த்தரும், மணவாட்டியுமாக திகிலடைய செய்கிறார். அதனைப்போல் நம் ஆத்துமாவிற்குள் இருக்கிற துஷ்ட பிசாசு திகிலடையும் படி நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.