தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 6:25

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவனும், சபைக்குரிய ஜனங்களுக்குரிய பாதுகாப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமா உலகமாகிய கறைகளால் வஞ்சிக்கபடாதபடி காக்கப்பட கர்த்தரின் வாசற்படியில் நித்தம் விழித்திருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 7:1-3 

ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,

இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

மேற்கூறபட்ட வசனங்களில் இரண்டாவதாக எஸ்தர் ராஜாத்தி ஆயத்தம் பண்ணின விருந்துக்கு ராஜாவும், ஆமானும் வந்த போது, திராட்ச ரசம் பரிமாறப்படும் போது; ராஜா எஸ்தர் ராஜாத்தியிடம் உன் வேண்டுதல் என்ன; உன் மன்றாட்டு என்ன; நீ ராஜ்யத்தின் பகுதி மட்டும் கேட்டாலும் உனக்கு கொடுக்கப்படும் என்று சொல்ல, ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: உம்முடைய கண்களில் எனக்கு கிருபைக் கிடைத்து ராஜாவுக்கு சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் கட்டளையிடப்படுவதாக என்கிறாள்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்டுள்ள வசனங்களில் நாம் கர்த்தரின் சமூகத்தில் ஆயத்தப்படுத்துகிற பரிசுத்த பந்தியில், கர்த்தர் நமக்கு தருகிற  நன்மைகள் திருஷ்டாந்தப்படுத்துகிறதென்னவென்றால் நமக்கு கிறிஸ்துவின் ஜீவனும், நமக்கு கர்த்தருக்குரிய ஜனங்களையும் தருகிறார்.  ஆதலால் நம்முடைய வாழ்வில் உலகமாகிய ஆமானை அழித்து பரலோகத்துக்குரிய ஜீவனும், சபைக்குரிய ஜனங்களையும் தரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.