தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 27:18

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை எப்போதும் கனம்பண்ணுகிறவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் திடமனதோடு இஸ்ரவேல் சபைக்காக நிற்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

எஸ்தர் 6:1-4 

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதியிருக்கிறபடி ஆமான் மொர்தொகாயிக்காக தூக்குமரம் செய்வித்த அன்று ராத்திரியிலே ராஜாவுக்கு தூக்கம் வராத காரணத்தால் காலவர்த்தமானங்களில் எழுதியிருக்கிறபடி நடபடி புஸ்தகத்தை கொண்டு வர சொன்னான்; அது ராஜ சமூகத்தில் வாசிக்கப்பட்டது.   அப்பொழுது வாசல் காக்கிறவர்களில் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும், தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைபோட பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது என்ற இடத்தை ராஜா கண்ட போது சொன்னது: இதற்காக மொர்தெகாய்க்குக் கனமும், மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான்: அதற்கு சேவகர் ஒன்றும் செய்யபடவில்லை என்று சொல்ல, ஆமான் மொர்தெகாயை தூக்குமரத்திலே தூக்கிப் போட வேண்டுமென்று ராஜாவினிடத்தில் சொல்ல  வெளிமுற்றத்திலே வந்திருந்தான்.  அப்பொழுது ராஜா முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்ட போது அவனுடைய ஊழியக்காரர் 

எஸ்தர் 6:5-9 

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

மேற்கூறிய காரியங்களை ஆமான் ராஜாவினிடத்தில் சொல்ல ராஜா ஆமானை நோக்கி சொன்னது 

எஸ்தர் 6:10,11 

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

மேற்கூறபட்டவைகளின்படி ஆமான் மொர்தெகாய்க்கு செய்ய மொர்தெகாய்க்கு செய்து சொன்னது ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு  இப்படியே செய்யப்படும் என்றான். 

பிரியமானவர்களே முன் கூறபட்டவைகளின் விளக்கம் என்னவென்றால் நாம் கர்த்தரை கனம் பண்ணினால் கர்த்தர் நம்மையும் கனம் பண்ணுவார்.  அவரை நாம் கன ஈனம் பண்ணினால் அவரும் நம்மை கன ஈனம் பண்ணுவார் என்பதனை திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார். மேலும் சத்துரு நமக்கு விரோதமாக படுகுழி வெட்டினால்; நாம் கர்த்தருக்கு  நன்மை செய்வோமானால்,அவர் நமக்கு செய்கிற நன்மைகள் அளவிடாததாய் சத்துருக்களிடத்தில் பழிவாங்கிறவராய்; நமக்கு படுகுழி  வெட்டுகிற சத்துரு படுகுழியில் அகப்படும்படியாக செய்கிறார். ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தரை எப்போதும் கனம் பண்ணுகிறவர்களாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.