தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 37:40
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் திடமனதோடு இஸ்ரவேல் சபைக்காக நிற்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காய் பரிசுத்த பந்தியாகிய விருந்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 5:9-12
அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.
ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.
பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ராஜாத்தியாகிய எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரோடே கூட ஆமானையும் மீண்டும் விருந்துக்கு அழைத்ததினால் அவன் மிகவும் சந்தோஷமும், மனமகிழ்ச்சியுமாய் புறப்பட்டான். அரமனை வாசலில் வரும் போது மொர்தெகாய் மீண்டும் ஆமானைக் கண்டு எழுந்திராமலும், அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்ட போது, அவன் மொர்தெகாயின் மேலும் உக்கிரம் நிறைந்தவனான். ஆமான் அதனை கண்டு தன்னை அடக்கிக் கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும், தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து சொன்னது
எஸ்தர் 5:13-14
ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
மேற்கூறிய வார்த்தைகள் ஆமான் தன்னுடைய மனைவியோடு மொர்தெகாயை குறித்து பேசி முடித்த பின்பு, அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து சொன்னது ஐம்பது முழ உயரமான ஒரு தூக்கு மரம் செய்யப்பட வேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப் போடும்படி நாளைய தினம் ராஜாவுக்கு சொல்ல வேண்டும்;பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்த காரியம் ஆமானுக்கு நன்றாய் கண்டதினால் தூக்குமரத்தை செய்வித்தான்.
பிரியமானவர்களே மேற்கூறபட்ட கர்த்தரின் வசனங்களில் கர்த்தர் திருஷ்டாந்தத்திற்கு சொன்னது என்னவென்றால் கர்த்தரின் பரிசுத்த பந்தி நாம் தொடர்ந்து உட்கொள்ளும்போது, கிறிஸ்து நம்மில் பலபடுவார் என்பதும், நம்மில் உள்ள உலகத்தின் மேன்மையாகிய ஆமானிய சக்திகள் அழிப்பதற்கு அது காரணமாக இருக்கும் என்பது விளங்குகிறது. என்னவென்றால் அந்த மேன்மையான எண்ணங்கள் நம்மை சிந்திக்க வைப்பது என்னவென்றால் கிறிஸ்துவுக்கு விரோதமாக நினைவுகளாக துணிகரங்கொள்ளும். மற்றும் சாத்தானிய கூட்டம் எல்லாம் கிறிஸ்துவின் கிருபையை நம்மை விட்டு அழிக்க முன் வரும். ஆனால் அதற்கு தகுந்த பிரகாரம் கர்த்தர் நம்மை காப்பாற்றும்படியாக நாம் கிறிஸ்வுக்குள் பிரவேசிக்க வேண்டும். அப்போது சாத்தானுடைய எண்ணத்தால் அவனையே கர்த்தர் அழிப்பதற்கு ஏதுவாகும். இப்படியாக நாம் கர்த்தருக்காக (இஸ்ரவேல் சபை)க்காக திடனோடு உறுதியாக கர்த்தரோடு வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.