தேவனுக்கே மகிமையுண்டாவதாக
அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய போஜனபந்தியில் ஆமானிய சக்திகள் நம் ஆத்துமாவை வஞ்சிக்காதபடி, ஆத்துமாவை காக்க ஆயத்தப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உபவாசத்தோடும், ஜெபத்தோடும் விசுவாச யாத்திரை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 5:1
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.
மேற்கூறிய வசனங்களில் எஸ்தரின் உபவாசத்தின் மூன்றாம் நாளில் ராஜ வஸ்திரம் தரித்துக்கொண்டு, ராஜா அரண்மனை உள் முற்றத்தில் ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசானத்தில் வீற்றிருந்தான். பின்பு
எஸ்தர் 5:2,3
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
மேற்கூறபட்ட வார்த்தைகள் நிறைவேறின பின்பு எஸ்தர் சொன்னது: ராஜாவுக்கு சித்தமானால் நான் ராஜாவுக்கு செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்ற போது; ராஜா எஸ்தர் சொற்படி செய்ய ஆமானை தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் ஆமான் என்பது மனிதனை தெய்வமாக மேன்மைப்படுத்தி கூறுகிற ஒரு சக்திதான் என்பதனை நாம் புரிந்துக்கொண்டு, அவ்வித எண்ணங்கள் நம்முடைய உள்ளத்தில் வராதபடி, எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் கிறிஸ்து மட்டும் தான் நம்முடைய இரட்சகர் என்றும், அவரேயல்லாமல் வேறொரு இரட்சகர் நமக்கு இல்லை என்பதனையும் நாம் திடப்படுத்திக்கொண்டு, சபைக்குள்ளும், தேசத்து ஜனங்களுக்குள்ளும் ஆமானிய சக்தி ஜெயம் பெறாதபடி நாம் குறையாமல் கர்த்தரின் பாதத்தில் மூன்று நாள் உபவாசித்து, மன்றாடி அவருக்குள் கடந்து போய் அவர் கையிலிருக்கிற மகிமையான கிருபை நிறைந்த வசனத்தை பிடித்துக்கொண்டு, போஜனத்துக்காக ஆயத்தபடுத்தி, அவரோடு நாமும் போஜனம் செய்து, ஆமானிய சக்தியின் கிரியைகளை அந்த விருந்தில் அழிக்கும் படி நாம் கர்த்தரின் சமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.