தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 40:13 

கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உபவாசத்தோடும், ஜெபத்தோடும் விசுவாச யாத்திரை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை சத்துரு சாகடிக்க செயல்படும் போது கிறிஸ்து நமக்காக பரிதபிக்கிறவராயிருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 4:9-10 

ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.

அப்பொழுது எஸ்தர் ஆத்தாகினிடத்தில் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது:

மேற்கூறிய வசனங்களில மொர்தெகாய் ஆத்தாகினிடத்தில் சொல்லியனுப்பின செய்தியை எஸ்தருக்கு அறிவித்தான்.  பின்பு எஸ்தர் மொர்தெகாயினிடத்தில் சொல்லியனுப்பினது என்னவென்றால் 

எஸ்தர் 4:11 

யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

மேற்கூறிய வார்த்தைகளை மொர்தெகாயினிடத்தில் அறிவிக்கும்படியாக எஸ்தர் சொல்லியனுப்பினதற்கு; மொர்தெகாய் மறுபடி அனுப்பின செய்தி என்னவென்றால் 

எஸ்தர் 4:13 

மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

மேற்கூறபட்ட வார்த்தைகளை கேட்ட எஸ்தர் சொல்ல சொன்னது 

எஸ்தர் 4:14 

நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

மேற்கூறியவற்றை கேட்ட மொர்தெகாய் புறபட்டு போய் எஸ்தர் தனக்கு கற்பித்தபடியெல்லாம் செய்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின்படி நம்மில் யாராகயிருந்தாலும் கிறிஸ்துவினால் அழைக்கப்படாமலிருந்தால் பிதாவினிடத்தில் பிரவேசிக்க முடியாது என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  ஆனாலும் அவர் கண்களில் இரக்கம் கிடைத்தால் அவர் வசனமாகிய கோல் நம்மை தேற்றும்.  அவ்விதம் நாம் எருசலேமில் தேற்றப்படுவோமாகில் தேசத்திற்காக (சபைக்காக) திறப்பிலே நிற்கிறவர்களாக இருக்க வேண்டும்.  அப்படி நிற்காமல் நிர்விசாரிகளாக இருப்போமாகில் கர்த்தர் நமக்கு பதிலாக வேறொருவரை எழுப்புவார்.  ஆதலால் நாம் தேசத்திற்காக அல்லும், பகலும் உபவாசித்து சத்துருவை ஜெயித்து, செத்தாலும் கர்த்தருக்காய் சாகிறேன் என்று சொல்லி ராஜாவினிடத்தில் பிரவேசித்து நம்முடைய விசுவாச ஓட்டத்தை துவக்குகிறவர்களாக இருப்போம்.  அப்போது கர்த்தர் நம்மை வெட்கபடுத்தாமல் ஆசீர்வதிப்பார்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.