தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை சத்துரு சாகடிக்க செயல்படும் போது கிறிஸ்து நமக்காக பரிதபிக்கிறவராயிருக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளிலே நாம் தியானத்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேசத்திற்காக திறப்பிலே நிற்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்றவென்றால்
எஸ்தர் 4:5-8
அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டண வீதியிலிருக்கிற மொர்தெகாயினிடத்தில் புறப்பட்டுப்போனான்.
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,
யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.
மேற்கூறபட்ட வார்த்தைகளில் எஸ்தர் அனுப்பின வஸ்திரங்களை மொர்தெகாய் ஏற்றுக்கொள்ளாததால் எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து காரியம் என்ன? அதன் முகாந்தரம் என்ன என்று மொர்தெகாயிடம் விசாரிக்க அவனுக்கு கட்டளையிட்ட போது அவன் மொர்தெகாயினிடத்தில் புறப்பட்டு போய் விசாரித்தபோது , அவன் தனக்கு நடந்த எல்லா சம்பவத்தையும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையை அறிவித்ததுமன்றி சூசான் அரண்மனையில் பிறந்த கட்டளை நகலையும் கொடுத்து, அதனை எஸ்தருக்கு காண்பித்து தெரியப்படுத்தவும், அவன் அகத்தியமாய் ராஜாவுமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும், மன்றாடவும் வேண்டும் என்று அறிவிக்க சொன்னான். இதனை ஆத்தாகு எஸ்தருக்கு அறிவித்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகளில் இஸ்ரவேல் சபையில் சத்துரு கிரியை செய்து ஆத்துமாக்களை கொல்லும்படி வகை தேடும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிகவும் கவலைப்பட்டு கலங்கி கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணணுகிறவராக வெளிப்படுகிறார். மேலும் சத்துருவின் உள் நோக்கம் எல்லாம் வெளிப்படுத்தும் போது, கிறிஸ்து சகல காரியங்களிலெல்லாம் நம்மை கவனித்து நமக்காக பரிதபித்து பிதாவின் ஆவியானவருக்கு தெரியப்படுத்துகிறார், இப்படியாக நமக்கு ஆத்மாவில் நெருக்கங்கள் வரும் போது முன்னதாகவே நாம் அதனை அறிந்துணர்ந்து நம் கர்த்தரின் சந்நதியில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.