தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11தெசலோனிக்கேயர் 3:13

சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேசத்திற்காக திறப்பிலே நிற்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம் ஆத்துமா அழிந்து போகாமல் கிறிஸ்துவின் அடைக்கலத்துக்குள் மறைக்கப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 4:1-4 

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,

ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.

மேற்கூறிய வசனங்களில் அகாஸ்வேரு ராஜாவின் கட்டளையினால் சூசான் நகரம் கலக்கம் உண்டான பின்பு,  நடந்த யாவற்றையும் அறிந்த மொர்தெகாய் தன் வஸ்திரங்களை கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப் போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டே ராஜாவின் அரமனை வாசல் முகப்பு மட்டும் வந்தான்.   மேலும் ராஜாவின் உத்தரவும், கட்டளையும் போய் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும், ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்தி சாம்பலில் படுத்துக் கொண்டார்கள்.  அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும் போய், அதை அவளுக்கு அறிவிக்க, அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த இரட்டை எடுத்துப் போட்டு, அவன் உடுத்துவதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.  இதன் காரணமோவெனில் ஆமான் போட்ட சதியினால் ராஜாவின் கட்டளையும் யூத ஜனங்களுக்கு விரோதமாக முத்திரை நகல் பிறப்பிக்கபட்டது. 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகள் எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் தேவ சபையை அழிக்க புறப்பட்டு வருகிற அந்நிய ஆவிகளுக்கு நாம் எதிர்த்து போராடி மேற்க்கொள்ள வேண்டும்.  இரட்சிக்கப்பட்ட தேவனுடைய ஜனங்களுக்கு வரும் கஷ்டங்களை நம்முடைய கஷ்டமாக ஏற்றுக்கொண்டு நாம் தேவனிடத்தில் போராடி ஜெயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் அது நமக்கும், நம்முடைய ஆத்துமாவுக்கும் சேதமாக தீரும்.  என்னவென்றால் நாம் மட்டும் இரட்சிக்கபட்டு கர்த்தரின் காவலுக்குள் இருந்தால் போதாது.  பிறருடைய இரட்சிப்பு இழந்து போகாமல் காத்துக்கொள்ள நாம் சபையாக உபவாசித்து அழுகையோடு கர்த்தரிடத்தில் விண்ணப்பித்து அவர்கள் துக்கமும், புலம்பலும், அழுகையும் மாற்றும்படியாக நாம் தேசத்திற்காக திறப்பிலே நிற்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.