தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 18:18

என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் ஆத்துமா அழிந்து போகாமல் கிறிஸ்துவின் அடைக்கலத்துக்குள் மறைக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,மணவாட்டி சபையாகிய நாம் எந்த நெருக்கத்திலும் சோர்வடையாமல் கர்த்தரில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

எஸ்தர் 3:10-11 

அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,

ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆமான் யூதா குலத்தை அழிக்க பதினாயிரம் வெள்ளியை எண்ணிக் காரியகாரர் கையில் கொடுப்பேன் என்று ராஜாவிடம் சொன்னதற்கு ராஜா தன் கையிலிருக்கிற முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனாகிய ஆமானுடைய  கையில் கொடுத்து, அவனை நோக்கி அந்த ஜனத்துக்கு உன் இஷ்டபடியெல்லாம் செய்யலாம் என்றான்.  மேலும் அவன் செய்தது 

எஸ்தர் 3:12-15

முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.

அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

கூறிய வார்த்தைகளின்படியெல்லாம் கட்டளை நகல் பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் பிரசித்தம் பண்ணப்பட்டது.  அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய் புறப்பட்டுப் போனார்கள்; அந்த கட்டளை சூசான் அரண்மனையில் பிறந்தது; ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கூறிய பிரகாரம் இரட்சிக்கபட்ட மக்களின் ஆத்துமாவை அழிக்க வேண்டுவதே சாத்தானின் தந்திரமான யோசனை என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இப்படிபட்ட  காரியங்கள் தேவனுடைய மக்களுக்குள் நேரிடும் போது, அவர்கள் கலங்குகிறார்கள். எப்படியென்றால் நம்முடைய ஆத்துமாவில் ஆமானிய சக்திகள் பல விதத்தின் தேவனைவிட்டு நாம் விலகி போகும்படியாக கிரியை செய்யும்.  ஆதலால்  எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் சத்தியத்திற்குள் வாழ்ந்து, அவருடைய அடைக்கலத்துக்குள் எப்போதும் காக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.