தேவனுக்கே மகிமையுண்டாவதாக
11கொரிந்தியர் 4:8,9
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எந்த நெருக்கத்திலும் சோர்வடையாமல் கர்த்தரில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை சத்துருக்கள் நெருக்குகையில் நாம் தேவனுக்குள் திடமனதோடு காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 3:7-8
ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.
மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாக பூர் என்னபட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மாதத்தையும் குறித்து போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின் மேல் விழுந்தது. அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவினிடத்தில் சொன்னது: சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களை கைக்கொள்ளுதிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. மேலும் அவன் சொன்னது
எஸ்தர் 3:9
ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான்.
மேற்கூறிய வசனங்களின் படி ராஜா செய்தால் ஆமான் பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி காரியகாரர் கையில் கொடுப்பேன் என்றான்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் யூத மார்க்கத்திலமைந்தவர்களை அழிக்க வேண்டுமென்பதே ஆமானுடைய எண்ணமாயிருந்தது. அதற்காக அகாஸ்வேரு ராஜாவினிடத்தில் இந்த மார்க்கத்தை குறித்து, இவர்கள் நாடுகளிலெல்லாம் பரவுகிறார்கள் என்றும், இவர்களுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் எல்லா ஜனங்களை விட விகற்பமாக இருக்கிறது என்று கிறிஸ்துவினால் இரட்சிக்கபட்ட தேவனுடைய மக்களை குறித்து ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் கோபத்தை தூண்டி விடுகிறது,நம்முடைய வாழ்வில் கர்த்தருக்காய் பிரகாசிக்க விடாதபடி, சாத்தான் பல உபாய தந்திரங்களோடு செயல்பட்டு நம்முடைய சமாதானத்திற்கு மாறான காரியங்களை செய்து நம்மை போராட்டத்திற்குட்படுத்துவான். ஆனால் நாமோ சோர்வடையாமல் கர்த்தரிடம் மிகவும் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்து கர்த்தரை மட்டும் சேவிக்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.