தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம்18:46

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சத்துருக்கள் நெருக்குகையில் தேவனுக்குள் திடமனதோடு காணப்படவேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை குறித்து மட்டுமே மேன்மைப்படுத்த வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

எஸ்தர் 3:6 

ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.

மேற்கூறிய வசனங்கள் ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததை கண்ட போது,மூர்க்கம் நிறைந்தவனாகி மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்ததால் மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று அறிவிக்கபட்டிருந்தபடியினால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்குமிருக்கிற மொர்தெகாயின் ஜனங்கள் எல்லாரையும் சங்கரிக்க வகைதேடினான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தம்; என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறபடியினால் அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள்  உலக மேன்மை, உலக அந்தஸ்து இவையெல்லாம் அற்பமும் குப்பையும் என்றெண்ணி, கர்த்தராகிய தேவனை மட்டும்  மேன்மைபடுத்துவார்கள்.  அவ்விதமாக நாமும் காணப்படுவோமாகில், நமக்கு விரோதமாக உலகத்தார் எழும்பி நம்மை நெருக்குவார்கள்.  அவ்விதமாக நாம் நெருக்கப்படுகையில் நாம் திடனோடு காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.