தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11கொரிந்தியர் 10:17

மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை குறித்து மட்டுமே மேன்மைப்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தராகிய தேவன் இரட்சிப்பை வெளிப்படுத்துகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 3:1-5 

 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.

அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.

இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.

ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

மேற்கூறிய வசனங்களில் கூறியபடி இந்த நடபடிகளுக்கு பின்பு அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைபடுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக ஆமானுடைய ஆசனத்தை உயர்த்தி வைத்தான்.  ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்தார்கள்; அவனுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.  அப்பொழுது ராஜாவின் வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயை பார்த்து; நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். இப்படி அவர்கள் நாள்தோறும் அவனோடே சொல்லியும், அவன் தங்களுக்கு செவிக்கொடாதே போது, தான் யூதன் என்று அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு ஆமானுக்கு அறிவித்தார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்கள்  திருஷ்டாந்தத்திற்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது என்னவென்றால் இரட்சிக்கபட்டவர்களின் அநேகருடைய உள்ளங்களில் உலக மேன்மை உண்டாயிருக்கும்.  அப்படி உண்டாயிருக்கிறவர்கள் விரும்புவது என்னவென்றால் மற்றவர்கள் எல்லாரும் தன்னை மேன்மைபடுத்தி உயர்த்தி பேசவேண்டும், மெச்சிக்கொள்ள வேண்டும், அவர்கள் தான் காரியங்களுக்கு தலைமையாக வேண்டும் என்று யோசிப்பார்கள்; இப்படிபட்டவர்களுடைய செயல்கள் தான் ஆகாகியனாகிய ஆமனுக்குரிய செயல்கள். ஆனால் தேவனை மட்டுமே நாம் மேன்மைபடுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி நாம் மனிதனை மேன்மைப்படுத்தாமல் இருக்கும் போது அவர்கள் நம்மேல் மிகுந்த கோபம் உள்ளவர்களாவார்கள்.  அப்படியிருந்தால் நமக்கு மிகுந்த உபத்திரவங்களை உண்டு பண்ணுவார்கள். ஆனால் எப்படிபட்ட உபத்திரவம் காணப்பட்டாலும், யார் எதை சொன்னாலும் நாம் கலங்கி போகாமலும், மனிதனுக்கு பயப்படாமலும் இருந்து கர்த்தரையே சேவித்து, பணிந்துக் கொள்ள வேண்டும்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.