தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 53:6

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தராகிய தேவன் இரட்சிப்பை வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பெற்றிருக்கிற கர்த்தரின் ஸ்தானம் இழந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 2:18-23  

அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.

எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.

அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.

இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.

அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய வசனங்களில்  ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜா தன்னுடைய சகல பிரபுக்களுக்கும், ஊழியக்காரருக்கும் எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்து செய்து, நாடுகளுக்கும் சலக்கரணை உண்டாக்கி  ராஜஸ்திதிக்கு தக்க வெகுமானங்களை கொடுத்தான்.  இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும் போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்து, எஸ்தர் தனக்கு கற்பித்திருந்த பிரகாரம் தன் பூர்வத்தரத்தையும், தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தான்;   எஸ்தர் மொர்தெகாயிடத்தில் வளரும் போது, அவன் சொற்கேட்டு நடந்தது போல, இப்பொழுதும் அவள் சொற்கேட்டு நடந்து வந்தாள்.    அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்த போது, வாசல் காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும், தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய  அகாஸ்வேருவின் மேல்  கைபோட வகை தேடினார்கள்.  இந்த காரியம் மொர்தெகாய்க்கு தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் அதனை மொர்தெகாயின் பேரால் ராஜாவுக்கு சொன்னான்.  அந்த காரியம் விசாரிக்கபடுகிற போது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்.  இது ராஜ சமூகத்திலே நாளாகம புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. 

பிரியமானவர்களே மேற்கூறபட்ட வசனங்கள் தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசுவினால் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்றால், நம்முடைய பிதாவாகிய தேவன் எல்லா ஜனங்களும் பரிசுத்த பந்தியை ஆயத்தம் பண்ணுகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  அல்லாமலும்  கர்த்தராகிய இயேசுவின் வசனத்தை காத்துக்கொள்கிறவர்களுக்கு அவர் இரட்சிப்பை அருளுகிறார்.  ஆனால் அவரை காட்டிக்கொடுக்கிறவர்களில் ஒருவனாக இருப்போமானால்  கர்த்தர் நம்மை சாபத்துக்குள்ளாக்குகிறார். ஆதலால் நமக்கு கர்த்தர் இரட்சிப்பை அருளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.