தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 27:18 

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரை கணம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,மணவாட்டி சபையாகிய நாம் கருத்தரின் அழைப்புக்கு ஏற்க நாம் கீழ்படிந்து அவர் சித்தம் செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து தியனித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர்1:13

அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ராஜ ஸ்திரீயாகிய  வஸ்தி ராஜாவின் அழைப்புக்கு கீழ்படியாததால் ராஜசமூகத்தை தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான

எஸ்தர்  1:14 

ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:

மேற்கூறப்பட ஏழு பிரதானிகளும் அங்கு இருந்ததால், ராஜா நியாயப்பிரமாணத்தையும், ராஜ நீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால் காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி ராஜாவாகிய அகாஸ்வேரு சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜ ஸ்திரீ செய்யாமற் போனதினிமித்தம், தேச சட்டத்தின்படி அவளுக்கு செய்ய வேண்டியது என்னவென்று ராஜா கேட்டதற்கு 

எஸ்தர் 1:16-20 

அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.

ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.

இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.

ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை மெமுகான் ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும் முன்பாக  சொன்னது அவர்களுக்கு நலமாக தோன்றியதால் ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, எந்த புருஷனும் தன் வீட்டுக்கு தன் வீட்டுக்கு தானே அதிகாரியாக இருக்க வேண்டும் என்றும், இதை அந்தந்த பாஷையிலே பிரசித்தம் பண்ண வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும் ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதியனுப்பினான்.

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின்படி கர்த்தரின் கட்டளைக்குக் கீழுபடியாததால் கர்த்தர்தாமே பரிசுத்தவான்களில் ஐக்கியதையில் இருந்து ஆலோசனை கூடி, அது கர்த்தரின் தேசத்துக்கு விரோதமான மீறுதல் ஆகையால் நம்மை பார்த்து மற்றவர்களும் அவருடைய வார்த்தையை அசட்டைபண்ணுவார்கள் என்று ஆலோசித்து நமக்கு தந்த ராஜ மேன்மையான அபிஷேகத்தை நம்மிலிருந்து மாற்றி மற்றவர்களுக்கு கொடுக்கிறார் என்பது அவருடைய வார்த்தையிலிருந்து அறியமுடிகிறது. ஆதலால் நாம் அவரை கனம்பண்ண வேண்டுமாகையால் யாவருக்கும் அதனை தெரியப்படுத்துகிறார்.  அப்படியாக நாம் அவர் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.