தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I கொரிந்தியர் 6:11

உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலும், அவர் அரண்மனைக்குள்ளும் பிரவேசிக்க ஆயத்தமாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளமாகிய கிறிஸ்துவின் தோட்டத்தில்  அவர் உலாவிக்கொண்டிருப்பார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 2:12-13  

ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,

இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.

மேற்கூறபட்ட வசனங்களில் ராஜாவின் கன்னிமாடத்தில் அழைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைபோளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்த வர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்ற சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாக ஸ்திரீகளின் முறைபடி பன்னிரண்டு மாதமாகச் செயல்பட்டு தீருகிற போது, ராஜாவினிடத்தில் பிரவேசிக்க அவளவளுடைய முறை வருகிற போது, ஜோடிக்கப்பட்ட பெண் ராஜவினிடத்தில் பிரவேசிப்பாள். மேலும் கன்னிமாடத்திலிருந்து ராஜ அரண்மனைக்கு போக அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகள் எல்லாம் கொடுக்கப்படும்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் நமக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவின் அழைப்புக்கேற்க தேவசமூகத்தில் நாம் கடந்து வந்தால் நம்முடைய உள்ளம் மிகவும் கர்த்தருக்கு உகந்த பிரகாரம் சுத்திகரிக்கப்பட வேண்டும். இந்த சுத்திகரிப்பினால் மட்டுமே நாம் ராஜ அரண்மனையாகிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் பிரவேசிக்க முடியும்.  அவ்விதமாக சரீரத்திற்குள் பிரவேசிக்கும் படியாக நாம் கேட்கிற கர்த்தருக்கு சித்தமான காரியங்கள் நமக்கு கர்த்தர் கொடுக்கிறார்.  இப்படியாக நாம் கர்த்தரின் சித்தம் செய்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.