தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 16:15
ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தரின் கண்களில் தயை கிடைக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்தநாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலும், அவர் அரண்மனைக்குள்ளும் பிரவேசிக்க ஆயத்தமாக வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 2:14-15
சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது.
மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.
மேற்கூறபட்ட வசனங்களில் எஸ்தர் சாயங்காலத்தில் அரண்மனைக்குள் பிரேசித்து , காலமே அபிமான ஸ்திரீகளைக் காவல் பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்கு திரும்பி வருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர் சொல்லி அழைப்பித்தாலொழிய ஒரு போதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக் கூடாது. எஸ்தர் அரண்மனைக்குள் பிரவேசிக்கும் முறை வந்த போது, அவள் ஸ்திரீகளை காவல் பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமல்லாமல் வேறொன்றும் கேட்காததால் அவளை காண்கிற யாவர் மேலும் தயைக்கிடைத்தது.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அடைக்கலமாகிற போது, நம்மை அவர் இரண்டாம் மாடமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே கொண்டு நிறுத்துவார். அப்போது நம்முடைய பரிசுத்தத்தை பார்க்கிற தேவன் நம்முடைய பரிசுத்தத்திற்கேற்ற பிரகாரம் நாம் நடந்தால் நம்மை அவர் பெயர் சொல்லி அழைக்கிறார். அவ்விதம் அழைக்கப்பட்டவர்கள், நமக்கு என்ன தேவையாக இருந்தாலும், அவர் சித்தம் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படியானால் யாவருடைய கண்களில் நமக்கு தயை உண்டாயிருக்கும். இப்படியாக நாம் யாவருக்கும் கர்த்தரின் கண்களில் தயை கிடைக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.