தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1தெசலோனிக்கேயர் 4:7,8 

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பெற்றிருக்கிற கர்த்தரின் ஸ்தானம் இழந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தரின் கண்களில் தயை கிடைக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 2:16-17 

அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.

மேற்கூறிய வசனங்களில் எஸ்தருக்கு ராஜாவுடைய கண்களில் தயவு கிடைத்த பின்பு, எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகபட்டாள்.  ராஜா சகல ஸ்திரீகளை பார்க்கிலும் எஸ்தர் மேல் அன்பு வைத்ததால், சகல கன்னிகளைப் பார்க்கிலும், அவளுக்கு அவன் சமூகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின் மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் திருஷ்டாந்தம் என்னவென்றால் கர்த்தர் நம்மை பெயர் சொல்லி அழைத்து சபைக்குள்ளில் எடுக்கும்போது நம்மை மிகவும் கவனிக்கிறது  என்னவென்றால் நாம் எவ்விதம் கிருபைகள் பெற்றிருக்கிறோம் என்றும், மற்றும் பரிசுத்த அலங்காரம் எப்படியிருக்கிறது என்பதனை பார்த்து தான் நம்மை அவர் ராஜ வஸ்திரத்தின் தகுதியாக்கி பட்டத்து ஸ்திரீயாக்குவார். இவ்விதமாக இருக்கையில் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால் நம்மை அந்த ஸ்தானத்தில் இருந்து மாற்றி விட்டு மற்றவர்களுக்கு கொடுக்கிறார் என்பதனை தான் வஸ்தியும், எஸ்தரையும் நமக்கு கர்த்தர் திருஷ்டாந்தப் படுத்துகிறார். ஆதலால் நாம் பெற்ற பரிசுத்தம் இழந்து போகாமல் காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.