தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லேவியராகமம் 26:12

 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளமாகிய கிறிஸ்துவின் தோட்டமாகிய சபையில் கிறிஸ்து உலாவிக்கொண்டிருப்பார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் ஒரே குடும்பம் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 2:11 

எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.

மேற்கூறிய வசனங்களில் எஸ்தரும், ஏழு தாதிமார்களும் கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே இருக்கையில், அவளுடைய சுகசெய்தியையும், அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நாம் தியானிக்கையில் கர்த்தர் நம்மில் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கிறிஸ்துவின் தோட்டமாகிய சபையில் கிறிஸ்து உலாவுகிறார் என்பதனையும், அவரோடு ஏழு தூதர்கள் இருக்கிறார்கள் என்பதும், நம்முடைய உள்ளமாகிய கிறிஸ்துவின் தோட்டத்தில் நம்மில் நடப்பிக்கும் காரியத்தை அறியும்படியாக கரத்தர் உலாவிக்கொண்டிருப்பார் என்பது தெளிவுப்படுத்தபடுகிறது.  ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம் வாழ்வில் கர்த்தர் நம் உள்ளத்தில் உலாவும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.