தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11கொரிந்தியர் 5:16

ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் ஒரே குடும்பம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை பிதாவாகிய தேவன் கிறிஸ்துவினால் அழைக்கிறார்  என்பதன் திருஷ்டாந்தம் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

எஸ்தர் 2:10

எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.

மேற்கூறபட்ட வசனத்தில் கன்னிமாடத்தில் சேர்க்கபட்ட பின்பு அவள் தன் குலத்தையும், தன் பூர்வோத்தாரத்தையும் அறிவிக்காதிருந்தாள்.  ஏனென்றால் அவள் வளர்ப்பு தகப்பனாகிய மொர்தெகாய் அதை தெரிவிக்க வேண்டாமென்று அவளுக்கு கற்பித்திருந்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஏனென்றால் கிறிஸ்துவினால் தேவன் நம்மை அழைத்து கன்னிமாடமாகிய இஸ்ரவேல் சபையில் கொண்டு சேர்க்கப்பட்ட பின்பு நாம் யாரும் நம்முடைய பூர்வத்தாரை குறித்தோ, மற்றும் குலத்தை குறித்தோ நாம் பெருமைபடுவது நியாயமல்ல என்றும், அதனை குறித்து நாம் யாரிடத்திலும் கூறகூடாது என்பதும், அதனை மறந்து விட வேண்டும் என்பதும், கர்த்தரின் சபையே நம்முடைய முழுகுடும்பம் என்பதனையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.  ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே  நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் குடும்பமாக மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.