தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:37

 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை பிதாவாகிய தேவன் கிறிஸ்துவினால் அழைக்கிறார்  என்பதன் திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற கிருபைகள் இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 2:6-7

அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.

அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.

மேற்கூறிய வசனங்களில் வஸ்திக்கு பதிலாக வேறொரு கன்னிப்பெண்ணை பட்டத்து ஸ்திரீயாக்க வேண்டும் என்ற கட்டளையும் தீர்மானமும் ராஜாவினால் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனையில் அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளை காவல் பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள். 

பிரியமானவர்களே,  மேற்கூறிய வசனங்களில் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கபடுகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது என்னவென்றால் மணவாட்டி சபையாக நம்மை கர்த்தர் அழைத்து  பின்பு, கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாய், அவருடைய சரீரமாகிய சபைக்குள் கொண்டு வந்து பாதுகாக்கப்படுகிறோம் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறார்.  ஆதலால் நாம் எப்போதும் கர்த்தரின் சொல் கேட்டு நடப்போம் என்று ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.