தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லூக்கா 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற கிருபைகள் இழக்காமல் பாதுகாக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிருபாவரங்களில் எப்போதும் ஜொலித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 2:5-7
அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
மேற்கூறிய வசனங்களில் ராஜாத்தியாகிய வஸ்திக்கு பதிலாக ராஜாவின் கண்களுக்கு பிரியமான கன்னி பட்டத்து ஸ்திரீயாக வேண்டும் என்று தீர்மானிக்கபட்ட பின்பு சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரனாகிய சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகோனியாவைப் பிடித்துக் கொண்டு போகிற போது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக் கொண்டு போகபட்டவர்களில் ஒருவனாயிருந்தான். மொர்தெகாயினுடைய சிறிய தகப்பன் எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான். தாய் தகப்பன் இல்லாத அந்த பெண்ரூபவதியும்,செளந்தரியமுடையவளுமாயிருந்தாள் அவளை மொர்தெகாய் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட பகுதியை தியானிக்கும் போது, கர்த்தர் கிருபா வரங்களினால் ஆசீர்வதிக்கும்போது, அவர் சத்தத்திற்கு எப்போதும் கீழ்படிகிறவர்களாக இருக்கவேண்டும். அல்லாவிட்டால் கர்த்தர் நமக்கு தந்த கிருபைகள் மற்றவர்களுக்கு கொடுக்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. மேலும் நாம் உள்ளான மனுஷனில் மிகவும் அதிகமாக பெலப்பட வேண்டும். அல்லாமலும் உள்ளான மனுஷன் பெலப்பட்டு ஒரு யூதனாக இருக்க வேண்டும்; அப்படியானால் மட்டுமே நாம் பாபிலோனுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலைபெற்று கிறிஸ்துவுடனே வளர்த்தபடுகிறோம் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் நாம் எப்போதும் கிறிஸ்து நம்மை ஆவிக்குரிய காரியங்களில் வளர்த்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.