தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 45:11
அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கருத்தரின் அழைப்புக்கு ஏற்க நாம் கீழ்படிந்து அவர் சித்தம் செய்ய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களின் பலவந்தத்தால் அல்ல தன் சொந்த ஆத்மீக சிந்தை பிரகாரம் பரிசுத்த பந்தியில் பங்கு பெற வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 1:9-10
ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.
ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,
மேற்கூறிய வசனங்களில் ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவின் அரணமனையில் ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள். ராஜா ஏழாம் நாளிலே திராட்ச ரசத்தால் களிப்பாயிருக்கும் போது, அவன் விரும்பினது என்னவென்றால் மகா ரூபவதியாயிருந்த வஸ்தியின் மகா செளந்தரியத்தை பிரபுக்களுக்கும் ஜனங்களுக்கும் காண்பிக்கும் பொருட்டு ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்து கொண்டு வரவேண்டுமென்று
எஸ்தர் 1:11
ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.
மேற்கூறப்பட்ட ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிடவும் அவள் வரமாட்டேன் என்கிறாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிக்கொண்டான்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் நாம் தியானிக்கையில் நம்மில் அநேகர் கர்த்தரின் விருந்தாகிய திராட்சரசத்தை கிறிஸ்துவின் இரத்தமாக நம்முடைய பிதாவாகிய தேவன் முத்திரித்து தருகிறதை புசிக்க வராமல் அசட்டைபண்ணி விடுவது; கர்த்தர் நமக்கு தந்திருக்கிற அபிஷேகத்திற்கு மாறான துர் எண்ணங்களுடையவர்களாக காணப்படுவதால் அவர் நம்மை வெறுத்து விடுகிறார் என்பதனை கருத்தில் கொண்டு, அந்த விசேஷித்த நாளை அற்பமாய் எண்ணாதபடி அது அநேருக்கு ஒரு புதுமை போலாக நாம் ஒவ்வொருவரும் நடந்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் நம்முடைய வாழ்வில் நாம் நடந்துக்கொள்ளாவிட்டால் கர்த்தர் நம்மேல் கடுங்கோபம் உடையவராக தனக்குள்ளே மூர்க்கமடைகிறார் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் எப்போதும் கர்த்தருக்கு கீழ்படிந்து அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக மன தாழ்மையுள்ளவர்களாக நடந்து; அவர் அழைப்புக்கு தக்க பிரகாரம் நாம் நடந்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.