தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 89:14

நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களின் பலவந்தத்தால் அல்ல தன் சொந்த ஆத்மீக சிந்தை பிரகாரம் பரிசுத்த பந்தியில் பங்கு பெற வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் முதற்பலனாகிய கிறிஸ்துவோடு திட்டம் பண்ண வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

எஸ்தர் 1:1-8 

இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.

அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள்.

அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பது நாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.

அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.

அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.

அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.

மேற்கூறிய வசனங்களில் இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு ராஜாவின் நாட்களில் நடந்தவைகளை நாம் தியானிப்போம்.  அவன் ராஜ்யபாரம் வகித்த நாட்களில் சம்பவித்ததாவது சூசான் அரண்மனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தான்.  அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே  தன்னுடைய பிரபுக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்து பண்ணினான்.  அப்போது மேதியா, பெர்சியா தேசங்களின் மகத்துவமானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும் அவன் சமூகத்தில் வந்திருந்தார்கள்.  அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும்,  தன்மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் நூற்றெண்பது நாளாக விளங்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.  அந்த நாட்கள் முடிந்த பின்பு ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர் சிறியோர் மற்றும் சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையை சேர்ந்த சிங்காரத் தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து பண்ணினான்.  அங்கே வெண்கல தூண்களின் மேலுள்ள வெள்ளி வளையல்களில் மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் பொற்சரிகையும் வெள்ளிசரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது. பொன்னால் செய்யப்பட்ட  நானாவித பாத்திரங்களில் பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்ச ரசம் ராஜ ஸ்தீரிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது. தன் மனதின்படியே செய்யலாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தபடியினால், முறைபடி பானம் பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம் பண்ணவில்லை. 

பிரியமானவர்களே, மேற்கூறிய பகுதிகளில் கர்த்தர் நமக்கு ஆயத்தப்படுத்துகிற கல்யாண விருந்திற்காக திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  இந்த விருந்தானது நம்முடைய பரிசுத்த பந்தியாகும்.  இதில் பங்கு பெறுகிறவர்களுக்கு கர்த்தர் அவருடைய மகிமையின் ஐசுவரியத்தை விளங்கபண்ணின பின்பு, சபையாக எல்லாரும் கிறிஸ்துவினிடத்தில் ஏழு நாள் கூடி வர வேண்டும் என்றும்; நம்முடைய விசுவாச வாழ்க்கையில்,  சத்திய வசனங்கள் ஏற்றுக்கொண்டு, கர்த்தரின் கட்டளை, கற்பனைகள் கைக்கொண்டு பிரமாணங்கள் பிரகாரம் நாம் நடந்தால் கர்த்தர் நம்மை ஆவிக்குரிய  வரங்களினால் நம்மை நிரப்புவார். அல்லாமலும் கிறிஸ்துவின் இரத்தத்திற்கு ஐக்கியமாக திராட்ச ரசத்தையும், கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஐக்கியமாக அப்பத்தையும் பிதாவாகிய தேவன் முத்திரித்து நாம் அதனை புசித்து, குடிக்கும்படியாக கிறிஸ்து நமக்கு ராஜஸ்தீரிக்கு ஏற்கப் பரிபூரணமாய் பரிமாறுகிறார் என்பது திருஷ்டாந்தப் படுத்தப்படுகிறது. மேற்கூறிய காரியத்தில் கர்த்தர் போட்டிருக்கிற கட்டளை என்னவென்றால் அவரவர் தங்கள் மனதின் படியே பானம்பண்ண வேண்டும்; ஒருவரும் பலவந்தம் செய்யக்கூடாது.  ஆதலால் நம்முடைய வழ்க்கையில் நாமே ஒரு தீர்மானம் எடுத்து பரிசுத்த பந்தியில் பங்கு கொண்டு, கிறிஸ்து கற்பித்த பிரகாரம் நாம் பரிசுத்தமாக நடக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.