தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11கொரிந்தியர் 6:14,15

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் முதற்பலனாகிய கிறிஸ்துவோடு திட்டம் பண்ண வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் எல்லா நாளிலும் கிறிஸ்து தான் வெளிப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 13:22-31 

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.

அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.

அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத் தவிர யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்.

அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.

யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.

இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,

குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

மேற்கூறிய வசனங்களின்படி , நெகேமியா ; ஓய்வு நாளை பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களை சுத்தம்பண்ணிக் கொண்டு வாசலைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன் என்று கர்த்தரிடத்தில் கூறி என் தேவனே, நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய  மிகுந்த கிருபையின் படி எனக்கு இரங்குவீராக என்று மன்றாடி; அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளை சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன், அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; அவர்கள் அந்தந்த பாஷையை தவிர, யூதபாஷையை திட்டமாய் பேச அறியாதிருந்தார்கள். அவர்களையும் கடிந்துக் கொண்டு, அவர்கள் மேல் வரும் சாபத்தை கூறி,அவர்களில் சிலரை அடித்து, மயிரை பிய்த்து; நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்கு கொடாமலும்,அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்க வேண்டுமென்று ஆணையிடபண்ணி; அவர்களை நோக்கி சாலொமோன் தேவனுக்கு சிநேகிதனாயிருந்த போதிலும், மறுஜாதியான ஸ்திரீகள் அவனை பாவஞ்செய்யப் பண்ணினதையும், எடுத்து கூறி நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளை சேர்த்துக்கொள்கிறதினால் தேவனுக்கு துரோகிகளாய், இந்த பெரியப் பொல்லாப்பை செய்ய உங்களுக்கு இடம்கொடுப்போமோ என்றான்.  மேலும் பொல்லாப்பு செய்தவர்கள் என்று நெகேமியா 13:28-ல் கூறுகிறது.  ஆகையால்  அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கு கர்த்தராகிய தேவன் நமக்கு நெகேமியா மூலம் திருஷ்டாந்தப்படுத்தி காண்பிக்கிறார்.அவ்விதம் கர்த்தருக்கு சித்தமில்லாத கிரியைகளை நாம் நடப்பிப்போமானால் அவர் நம்மை தண்டிக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.  அல்லாமலும் கரத்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை சீர்திருத்துகிறவராகவும், தேவ சித்தம் செய்ய வைக்கிறார்.  என்னவென்றால் இரட்சிக்கபடாதவர்களை சேர்த்துக் கொண்டால் நாம் தேவனுக்கு துரோகம் செய்கிறவர்களாக மாறுகிறோம்.  மேலும் மறுஜாதிகளுடைய செயல்பாடுகளில் நாம் சிக்கிக் கொள்ளாமல் நம்மை அனுதினம் சுத்திகரித்துக் கொண்டு, நம் உள்ளத்தில் கிறிஸ்து முதற்பலனாக வெளிப்பட வேண்டும்.  இவ்விதம் முதற்பலன்களோடு (கிறிஸ்து)திட்டம்பண்ணினால் கர்த்தர் நமக்கு நன்மையுண்டாகும்படி நினைத்தருளுகிறார்.  இப்படி தேவன் நம்மை நினைத்தருளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையை தீட்டுபடுத்தினார்கள் என்பதனை நினைத்து, இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலைகளின் முறைகள குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்த வேண்டிய விறகு காணிக்கையையும், முதற்பலன்களையும் குறித்து திட்டம்பண்ணினேன்; எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும் என்று கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கர்த்தராகிய இயேசுவை நம்முடைய இருதயங்களில் பரிசுத்தம் பண்ண வேண்டும் என்றும், கர்த்தருடைய வசனம் நம்முடய இருதயத்திற்கு காவலாகவும்; என்னவென்றால் எந்த துர் கிரியைகளும் இருதயத்தில் பிரவேசித்து பாவஞ்செய்வதற்கு தூண்டாதபடிக்கு நாம் காத்துக்கொள்வதும், மற்றும் கிறிஸ்துவினால் மீண்டெடுக்கபடாதவர்களை (இரட்சிக்கபடாதவர்களை) நம்முடைய பரிசுத்த ஐக்கியமாகிய குடும்பங்களில் சேர்க்காமல் இருக்க வேண்டும் என்பதனையும், கர்த்தராகிய தேவன் நமக்கு நெகேமியா மூலம் திருஷ்டாந்தப்படுத்தி காண்பிக்கிறார். அவ்விதம் கர்த்தருக்கு சித்தமில்லாத கிரியைகளை நாம் நடப்பிப்போமானால் அவர் நம்மை தண்டிக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.  அல்லாமலும் கரத்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை சீர்திருத்துகிறவராகவும், தேவ சித்தம் செய்ய வைக்கிறார்.  என்னவென்றால் இரட்சிக்கபடாதவர்களை சேர்த்துக் கொண்டால் நாம் தேவனுக்கு துரோகம் செய்கிறவர்களாக மாறுகிறோம்.  மேலும் மறுஜாதிகளுடைய செயல்பாடுகளில் நாம் சிக்கிக் கொள்ளாமல் நம்மை அனுதினம் சுத்திகரித்துக் கொண்டு, நம் உள்ளத்தில் கிறிஸ்து முதற்பலனாக வெளிப்பட வேண்டும்.  இவ்விதம் முதற்பலன்களோடு (கிறிஸ்து) திட்டம்பண்ணினால் கர்த்தர் நமக்கு நன்மையுண்டாகும்படி நினைத்தருளுகிறார்.  இப்படி தேவன் நம்மை நினைத்தருளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.